சூட்கேஸ் தொலைஞ்சு போச்சு - இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த பயணி

நந்தன் குமாரின் கதை அதுவல்ல. பாட்னாவிலிருந்து மும்பைக்கு இண்டிகோவின் விமானத்தில் பயணித்தார் அவர். அவரது உடமைகள் மற்றொரு பயணிக்கு தவறுதலாக மாற்றப்பட்டன. தங்களது உடமை வித்தியாசமாக இருப்பதாக சந்தேகமடைந்த அவரது மனைவி வீட்டிற்கு வந்த பிறகுதான் அது தங்களுடையதல்ல என்று உணர்ந்தார்.
நந்தன் குமார்
நந்தன் குமார்NewsSense
Published on

விமானங்களில் பயணம் செய்வோருக்கு தங்களது உடமைகள் தொலைந்து போவது வாடிக்கையான ஒன்று. பயணத்தின் போது சூட்கேசுகள் மாறிப் போகலாம். அதை திரும்பப் பெறுவதற்கு காத்திருக்க வேண்டும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துடன் பேச வேண்டும். இப்படியெல்லாம் இந்த் தலைவலி நீடிக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வேறு வழியில்லை.

ஆனால் நந்தன் குமாரின் கதை அதுவல்ல. பாட்னாவிலிருந்து மும்பைக்கு இண்டிகோவின் விமானத்தில் பயணித்தார் அவர். அவரது உடமைகள் மற்றொரு பயணிக்கு தவறுதலாக மாற்றப்பட்டன. தங்களது உடமை வித்தியாசமாக இருப்பதாக சந்தேகமடைந்த அவரது மனைவி வீட்டிற்கு வந்த பிறகுதான் அது தங்களுடையதல்ல என்று உணர்ந்தார். இதை டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டார் நந்தன் குமார். இவர் ஒரு மென்பொருள் பொறியியலாளர்.

நந்தன் குமார்
நந்தன் குமார்NewsSense

இதற்காக அவர் இண்டிகோவின் வாடிக்கையாளர் சேவை மையத்துடன் தொடர்பு கொண்டார். மையத்திலிருந்தவர் மற்றொரு பயணியைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். எதுவும் பலனளிக்கவில்லை. பிறகு நந்தன் குமார் அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார். இண்டிகோவின் இணையதளத்தை ஹேக் செய்து அந்த மற்றொரு பயணியின் விவரத்தை எடுக்கலாம் என முடிவு செய்தார்.

அதை எப்படி செய்தேன் என்று அவர் விளக்குகிறார். எஃப் 12 பட்டன் மூலம் டெவலப்பர் பிளாட்ஃபார்மை திறந்து இண்டிகோவில் பதிவு செய்த பயணிகளின் விவரங்களை அவர் எடுத்தார். இறுதியாக அவர் தனது உடமைகளை தவறுதலாக எடுத்துச் சென்ற பயணியின் விவரங்களை இண்டிகோவின் ஒரு வலைப்பின்னலில் கண்டு கொண்டார். அதைத்தான் ஹேக்கர் தருணம் என்று அழைக்கிறார்.ஆரம்பத்தில் அவர் இண்டிகோவில் இணைய தளத்தில் சென்று பயணிகளின் தொடர்பு விவரங்களை தேட முயற்சித்ததாகவும் அப்போது எதையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் நந்தன் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியோ நந்தன் தனது உடமையை வைத்திருந்த பயணியைத் தொடர்பு கொண்டார். இருவரும் அருகிலேயே வசிப்பதால் அவர்கள் விரைவாக ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டு தங்களது உடமைகளை பரிமாறிக் கொண்டனர். இண்டிகோ ஏர்லைன்ஸின் உதவியின்றியே இவற்றை நந்தன் செய்து முடித்தார். இதையடுத்து நந்தன் இண்டிகோவிற்கு சில ஆலோசனைகளை வழங்குவதாக முடிவு செய்தார்.

நந்தன் குமார்
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

அவர் இண்டிகோவில் ஐவிஆர் எனப்படும் தானியங்கி குரல் சேவையின் பிரச்சினையை சரிசெய்யுமாறும், முக்கியமாக அவர்களது இணையதளத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார். ஏனென்றால் நந்தன்தான் அந்த இணையதளத்திலிருந்து வாடிக்கையாளர்களின் முகவரியை எடுத்தார். இத்தகைய கசிவு பயணிகளுக்கு நல்லதல்ல.

இறுதியாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்தவர் அதிரடியாக ஒன்றைக் கூறுகிறார். நந்தன் குமாரின் உடைமைகளை எடுத்துச் சென்ற பயணியிடம் தான் மூன்று முறை அழைத்ததாக கூறினார். ஆனால் நந்தன் அந்த பயணியிடம் அப்படி அழைப்பு வந்ததா என்றால் ஒரு அழைப்பு கூட வரவில்லை என்றார் அந்தப் பயணி.

சரி, நந்தன் குமாருக்கு கணினியின் மென்பொருள் விவகாரம் அத்துப்படி. அதனால் இணையதளத்தில் "ஹேக்" செய்து தனது சூட்கேசை எடுத்துச் சென்ற பயணியின் விவரத்தை கண்டு கொண்டார். நம்மைப் போன்ற அப்பாவிகள் என்ன செய்வோம்? மேலும் வாடிக்கையாளர் தரவுகள் ஒரு விமானநிலையத்தின் இணையதளத்திலிருந்து எடுக்க முடியும் என்றால் அதை என்னவென்று சொல்வது? எல்லாம் இண்டிகோவிற்கே வெளிச்சம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com