இந்தியாவின் சொந்த தயாரிப்பான இந்த்ரி என்ற விஸ்கி மதுபானம், 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த விஸ்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்டு விருது இந்த்ரி விஸ்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மதுபான வகையான இதனை ஹரியானாவில் உள்ள பிக்காடில்லி டிஸ்டிலரிஸ் தயாரிக்கிறது. 2021ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இவர்கள் இந்தியாவின் முதல் ட்ரிபிள் பேரல் சிங்கிள் மால்ட் விஸ்கியான, இண்டியா ட்ரினி-யை அறிமுகப்படுத்தினர்.
தி சண்டே கார்டியன் என்ற தளத்தின் அறிக்கையின்படி இந்த்ரி விஸ்கி இதுவரை 14 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது
The Whiskeys of The World விருதுகள் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு விருது வழங்கும் விழாவாகும். இதில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கும்100க்கும் மேற்பட்ட விஸ்கி வகைகளை சுவைத்து பார்த்து அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழு.
மதுபானத் தொழில்துறையின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களைக் கொண்ட இந்த குழு, விஸ்கி வகைகளில் இருந்து ஒரு விஸ்கியை சிறந்ததாக தேர்வு செய்கிறது.
இந்த Best-in-Class விஸ்கிகளில் இருந்து Best In Show என்ற விருதுக்கு மதிப்பிடப்படுகின்றன.
தேர்வுக்கு வைக்கப்பட்ட இந்த்ரி திவாலி கலெக்டர்ஸ் எடிஷன் 2023, தன்னுடன் போட்டியிட்ட மற்ற மதுபான வகைகளான ஸ்காட்ச், போர்பான், கனடா, ஆஸ்திரேலியாவின் சிங்கிள் மால்ட் வகைகளை தோற்கடித்து, இந்த விருதினை வென்றுள்ளது.
2023 இந்த்ரி திவாலி கலெக்டர்ஸ் எடிஷன், ஆறு வரிசை பார்லியில் இருந்து தயாரிக்கப்பட்டு பாரம்பரிய செப்புப் பானை ஸ்டீல்களைப் பயன்படுத்தி வடிகட்டப்படுகிறது.
சூடேற்றி பீப்பாய்களில் பல வருடங்களாக வைக்கப்பட்ட பழமையான விஸ்கி, புகைத்த வாடை மற்றும் உலர்ந்த பழங்கள், சாக்லேட் மற்றும் வறுக்கப்பட்ட பருப்புகள் போன்ற சுவை கொண்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust