இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை புதிய நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நாட்டின் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இந்த பட்ஜெட் தாக்கல் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சாமானியர் தொடங்கி தொழிலதிபர்கள் வரை இந்த பட்ஜெட் தாக்கல், பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட்டில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அந்த விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1947 நவம்பர் 26 ஆம் தேதி தான் இந்தியாவுக்கான முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.
1955 வரை மத்திய பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டதாம்.
அதன் பின்னர் 1955-56 ஆம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் இந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு வரை தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. அதன்பின்னர் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் ஒன்றாக இணைக்கப்பட்டது.
பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு பதிலாக அவர் டேப்லெட்டை பயன்படுத்தினார்.
இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை (2 மணி நேரம் 42 நிமிடங்கள்) 2020-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust