கோடை விடுமுறைக்கு கோவா செல்ல திட்டமா? IRCTC -ன் இந்த திட்டத்தை முயற்சித்து பாருங்கள்

திருவனந்தபுரத்தில் மே மாதம் 23ஆம் தேதி தொடங்கி அஜந்தா, அவுரங்காபாத், கோவா, ஹம்பி, ஐதராபாத், மும்பை, மைசூர், ஸ்டாச்சூ ஆஃப் யூனிட்டி ஆகிய நகரங்களுக்கு செல்கிறது.
Goa
GoaPexels

IRCTC கோவா செல்வதற்கான நான்கு பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நான்கு பேக்கேஜ்களும் வெவ்வேறு விதமான பயணங்களில், கட்டணங்களில் வழங்கப்படுகின்றன.

மும்பையிலிருந்து, ராஞ்சியிலிருந்து, கொல்கத்தாவிலிருந்து மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து இந்த பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன.

Goa
GoaNewsSense

பாரத பைட்ரிகா யாத்ரா

இது திருவனந்தபுரத்திலிருந்து கோவா செல்லும் பேக்கேஜ்.

திருவனந்தபுரத்தில் மே மாதம் 23ஆம் தேதி தொடங்கி அஜந்தா, அவுரங்காபாத், கோவா, ஹம்பி, ஐதராபாத், மும்பை, மைசூர், ஸ்டாச்சூ ஆஃப் யூனிட்டி ஆகிய நகரங்களுக்கு செல்கிறது.

இது ரயில் பயணம்தான். எனவே இது 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் என இந்த பேக்கேஜ் நீள்கிறது. இதில் உங்களுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகளும் அடங்கும்.

இதற்கான கட்டணம் 21,100ரூபாய்.

கோவா கெட்டவே

கொல்கத்தாவிலிருந்து இந்த பயணம் தொடங்கும். இது விமானப் பயணம்.

4 இரவுகள் மற்றும் 5 பகல்கள் என கொடுக்கப்பட்டுள்ள இந்த பேக்கேஜ் ஜுலை 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி நிறைவடையும்.

இந்த பேக்கேஜிற்கான கட்டணம் – 24,400ரூபாய்.

ஏ பெர்ஃபெக்ட் ஹாலிடே டெஸ்சினேநேஷன் கோவா எக்ஸ் மும்பை

இந்த பேக்கேஜ் மும்பையில் தொடங்கி, கோவா, ஓல்ட் கோவா, தெற்கு கோவா என சுற்றி மும்பை வருகிறது.

3 இரவுகள் 4 பகல்கள் என கொடுக்கப்பட்டுள்ள இந்த பேக்கேஜ்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதுவும் விமானப் பயணம்தான். இதற்கான கட்டணமும் ஐஆர்சிடிசி தளத்தில் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல இதுகுறித்த விசாரணைகளை மட்டுமே நீங்கள் தற்போது ஐஆர்சிடிசியில் பதிவு செய்ய முடியும்.

கோவா கெட்டவே எக்ஸ் ராஞ்சி

இது 5 இரவுகள் 6 நாட்கள் பேக்கேஜாக வழங்கப்படுகிறது.

இதற்கான கட்டணம் 34,245ரூபாய்.

இந்த பேக்கேஜ் குறித்த கேள்விகளை மட்டுமே தற்போது நீங்கள் ஐஆர்சிடியில் பதிவு செய்ய முடியும் இந்த பேக்கேஜை நீங்கள் தற்போது புக் செய்ய இயலாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:


Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com