Goa செல்ல வெறும் ரூ.12,000 போதுமா! IRCTC-யின் குறைந்த விலை பேக்கேஜ் பற்றி தெரியுமா?

நண்பர்களுடன் பலமுறை கோவா செல்ல திட்டமிட்டு, பட்ஜெட் காரணமாக போகமுடியாமல் இருந்திருக்கு என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. குறைந்த பட்ஜெட்டில் இனிமே கோவா சென்று வரலாம். எப்படி?
Goa செல்ல வெறும் ரூ.12,000 போதுமா! IRCTC-யின் குறைந்த விலை பேக்கேஜ் பற்றி தெரியுமா?
Goa செல்ல வெறும் ரூ.12,000 போதுமா! IRCTC-யின் குறைந்த விலை பேக்கேஜ் பற்றி தெரியுமா?Canva

இந்தியாவில், எல்லாரும் மிகவும் விரும்பப்படும் இடம் என்றால் அது கோவா தான். ஒரு முறையாவது கோவாவுக்கு ட்ரிப் சென்று விடவேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும்.

நண்பர்களுடன் பலமுறை கோவா செல்ல திட்டமிட்டு, பட்ஜெட் காரணமாக போகமுடியாமல் போனது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. குறைந்த பட்ஜெட்டில் இனிமே கோவா சென்று வரலாம்.

ஐஆர்சிடிசி டூரிஸம் கோவாவிற்கு இரண்டு இரவுகள் மற்றும் மூன்று பகல்களுக்கான டூர் பேக்கேஜை வழங்குகிறது.

ஒரு நபருக்கு 12,625 மட்டுமே தான்! ஹைதராபாத்தில் இருந்து இந்தப் பயணம் தொடங்கும் என்று இந்திய ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐஆர்சிடிசி டூரிசம் தெரிவித்துள்ளது.

கோவாவிலிருந்து ஹைதராபாத் வரை இண்டிகோ ஏர்லைன்ஸின் எகானமி கிளாஸ் வழியாக பயணம் செய்யப்படும் என்று IRCTC சுற்றுலாவின் இணையதளமான irctctourism.com தெரிவித்துள்ளது.

IRCTC டூரிஸத்தின் கோவா பேக்கேஜ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே,

சுற்றுலாப் பயணத்திற்கான கட்டணம் பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஷன்ஸ்களுக்கு ஏற்ப மாறுபடும். ஐஆர்சிடிசி டூரிஸத்தின் இணையதளத்தின்படி, ட்ரிபிள் ஆக்யூபெசனுக்கு ரூ.12,625 செலுத்த வேண்டும்.

  • வகுப்பு கட்டணம்

  • சிங்கிள் ஆக்யூபெசன் ரூ.16,415

  • டபிள் ஆக்யூபெசன் ரூ 12,955

  • டிரிபிள் ஆக்யூபெசன் ரூ 12,625

  • குழந்தையின் (2-11 வயது) படுக்கையுடன் கூடிய ஆக்யூபெசன் ரூ 10,980

இந்த பேக்கேஜில் விமான டிக்கெட்டுகள் (ஹைதராபாத்-கோவா-ஹைதராபாத் சுற்று பயணம்), பயண காப்பீடு, காலை உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை அடங்கும். இந்த பேக்கேஜ் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிடத்தை வழங்குகிறது.

மதிய உணவு மற்றும் தனிப்பட்ட நபருக்கு தேவைப்படும் பொருட்கள், ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் ஆகியவை பேக்கேஜின் ஒரு பகுதியாக இல்லை என்று IRCTC டூரிஸம் குறிப்பிட்டது.

ஐஆர்சிடிசி டூரிஸம் தாய்லாந்திற்கு நான்கு இரவு மற்றும் ஐந்து நாள் டூர் பேக்கேஜை ரூ. 32,300 முதல் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Goa செல்ல வெறும் ரூ.12,000 போதுமா! IRCTC-யின் குறைந்த விலை பேக்கேஜ் பற்றி தெரியுமா?
கோவாவின் மறுபக்கம்: கடற்கரை நகரத்தில் பார்க்க வேண்டிய 5 கோயில்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com