சிறை சுற்றுலா: ஒரு இரவு கைதியாக வாழ 500 ரூபாய் கட்டணம் - எங்கு?

இந்த சிறையின் துணை கண்காணிப்பாளரான சதீச் சுக்கிஜா சிறையில் வந்து தங்குபவர்களுக்கு கைதிகளுக்கான உடையும், சிறையில் தயாரிக்கப்படும் உணவும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
சிறை சுற்றுலா: ஒரு இரவு கைதியாக வாழ 500 ரூபாய் கட்டணம் - எங்கு?
சிறை சுற்றுலா: ஒரு இரவு கைதியாக வாழ 500 ரூபாய் கட்டணம் - எங்கு?Twitter
Published on

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி சிறையில் ஒரு இரவு கைதிப் போல தங்குவதற்கு 500 ரூபாய் வசூலிக்கும் திட்டம் நடைமுறையில் வர இருக்கிறது.

ஜோசியக்காரர்களை சந்திக்கும் போது அவர்கள் எப்போதும் நேர்மறையாகவே பேசுவதில்லை. சில சமயம் மோசமானவற்றையும் கூறுவார்கள். அதிகமாக கூறப்படும் ஒரு துரதிஷ்டமான விஷயம் வாழ்க்கையில் சிறைக்குப் போக நேரிடும் என்பது தான். ஆண்களுக்கு இது அதிகம் கூறப்படும். இதிலிருந்து எளிதாக விடுபட தான் இந்த புதிய சிறை சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஹல்த்வானி சிறை
ஹல்த்வானி சிறை

ஹல்த்வானி சிறை 1903ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான ஒன்று. இது ஆயுத கிடங்காகவும் செயல்பட்டு வந்தது. 6 ஊழியர்கள் குவாட்டர்ஸுடன் பெரிய சிறைச்சாலையாகவே அமைந்திருக்கிறது.

இந்த சிறையின் துணை கண்காணிப்பாளரான சதீச் சுக்கிஜா சிறையில் வந்து தங்குபவர்களுக்கு கைதிகளுக்கான உடையும், சிறையில் தயாரிக்கப்படும் உணவும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அத்துடன் ஏற்கெனவே, பல அதிகாரமிக்க நபர்களிடம் இருந்து அவர்கள் கூறும் நபர்களை சில நாட்களுக்கு சிறையில் வைக்க கோரிக்கை வருவதாகவும் கூறியுள்ளார்.

சிறை சுற்றுலா: ஒரு இரவு கைதியாக வாழ 500 ரூபாய் கட்டணம் - எங்கு?
உலகைச் சுற்றி சாகச 'நடை பயணம்' - 2 நாடுகளில் சிறை தண்டனை? 24 வருட பயணக் கதை!

சிறையில் இருக்கும் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் சிறைச்சாலை சுற்றுலா வருபவர்களைத் தங்க வைப்பதற்கான போலி சிறைகள் உருவாக்க சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இங்கு வந்து ஒரு நாள் தங்குவதற்கு 500 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.

ஜோசியத்தில் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்கு சென்றே தீர வேண்டும் என விதி இருப்பவர்கள் இந்த சிறைத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த திட்டம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் இதனை ஊக்குவிப்பதாகவும் சதீஸ் கூறியிருக்கிறார்.

சிறை சுற்றுலா: ஒரு இரவு கைதியாக வாழ 500 ரூபாய் கட்டணம் - எங்கு?
உலகத்தின் மிக மோசமான பொதுக் கழிவறையை எது? - 91 நாடுகளைச் சுற்றி கண்டுபிடித்த நபர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com