இஸ்ரேல்: ஆந்திராவில் வாழும் யூதர்கள் - இந்தியாவை விட்டு வெளியேற நினைப்பது ஏன்?

யூத பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழும் இவர்கள் பெனே எப்ரைம் என்ற யூத பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என கருதுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஹீப்ரூ மொழியில் பேசவும் எழுதவும் தெரியுமாம்.
இஸ்ரேல்: ஆந்திராவில் வாழும் யூதர்கள் - இந்தியாவை விட்டு வெளியேற நினைப்பது ஏன்?
இஸ்ரேல்: ஆந்திராவில் வாழும் யூதர்கள் - இந்தியாவை விட்டு வெளியேற நினைப்பது ஏன்?Twitter
Published on

இஸ்ரேல் மட்டுமல்லாமல் யூதர்கள் உலகம் முழுவதிலும் பரவி வாழ்ந்தனர். ஒட்டமான் பேரரசு காலத்திலும், ஹாலோகாஸ்ட் நிகழ்த்தப்பட்டபோதும் உலகின் பல மூலைகளுக்கு சிதறினர். இந்தியாவின் பல பகுதிகளிலும் கூட குடியேறியிருக்கின்றனர். அப்படி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொத்தரெட்டிபாலத்தில் வசிக்கும் 40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர்.

யூத பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழும் இவர்கள் பெனே ஜேக்கப் ஜெப ஆலயத்தை 30 ஆண்டுகளுக்கு முன் கட்டியுள்ளனர். இவர்கள் பெனே எப்ரைம் என்ற யூத பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என கருதுகின்றனர்.

உலகப்போர்கள் ஏற்படுவதற்கு முன்பே அதாவது, இஸ்ரேலில் இருந்து 300 ஆண்டுகளுக்கு முன்பே தாங்கள் இடம்பெயர்ந்து இங்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர் இங்கிருக்கும் 40 குடும்பத்தினர்.

ஆனால் இந்த மக்கள் இஸ்ரேலியர்கள் என அங்கீகரிக்கப்படவில்லை. இவர்களது பழக்க வழக்கங்கள் தெலுங்கு பேசும் மாதிகா மக்களை ஒத்திருப்பதால் அவர்களுக்கு வழங்கும் அதே சான்றிதழ் இவர்களுக்கும் வழங்கப்படுவதாக குற்றம்சுமத்துகின்றனர்.

கொத்தரெட்டிபாலத்தில் 40 குடும்பத்தைச் சேர்ந்த 250 யூதர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஹீப்ரூ மொழியில் பேசவும் எழுதவும் தெரியுமாம்.

இவர்கள் சான்றிதழ்களில் ஒரு இந்திய பெயரும் பாரம்பரியமாக ஒரு யூத பெயரும் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீண்டும் இஸ்ரேல் திரும்ப வேண்டும் என எண்ணுகின்றனர். அனைத்து யூதர்களும் இஸ்ரேலுக்கு திரும்ப வேண்டும் என புனித நூலான தோராவில் கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றனர். மேலும் மணிப்பூரைச் சேர்ந்த 3000 யூதர்கள் இஸ்ரேலுக்கு திரும்பியதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இஸ்ரேல்: ஆந்திராவில் வாழும் யூதர்கள் - இந்தியாவை விட்டு வெளியேற நினைப்பது ஏன்?
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை : அ முதல் ஃ வரை - விரிவான தகவல்

இந்தியாவில்  மும்பை, கொச்சி, மணிப்பூர், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் யூதர்கள் வசிக்கின்றனர். ஆந்திராவில் யூதர்கள் இருப்பது 2004ம் ஆண்டுதான் வெளியில் தெரியவந்தது.

இப்போது பழங்குடி மக்களாக இருக்குமிவர்களை யூதர்களாக அங்கீகரிக்க அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இஸ்ரேல்: ஆந்திராவில் வாழும் யூதர்கள் - இந்தியாவை விட்டு வெளியேற நினைப்பது ஏன்?
இஸ்ரேல் : பாலும் தேனும் ஓடும் நாடு என அறியப்படுவது ஏன்?

சில ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலில் இருந்து ரபீக்கள் என்று அழைக்கப்படும் யூத மதத் தலைவர்கள் கொத்தரெட்டிபாலத்திற்கு வந்து அங்குள்ள உள்ளூர்வாசிகளின் விவரங்களைச் சேகரித்தனர்.

இந்திய அரசு இவர்களை யூதர்களாக அங்கீகரித்தால் இஸ்ரேலுக்கு இவர்கள் திரும்புவது எளிதாக இருக்கும் என்கின்றனர்.

இஸ்ரேல்: ஆந்திராவில் வாழும் யூதர்கள் - இந்தியாவை விட்டு வெளியேற நினைப்பது ஏன்?
இஸ்ரேல் என்ற நாடு உருவாக ஐன்ஸ்டீன் காரணமாக இருந்தது எப்படி? - அறிவியலாளரின் மற்றொரு முகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com