பள்ளி மாணவியின் ஆடையை கழற்றி சோதனை செய்த ஆசிரியை- அவமானத்தில் தீக்குளித்த சிறுமி

மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளார். இந்நிலையில், ஆசிரியை தன் உடைகளை கழற்றி சோதனை செய்ததால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
 Forced to remove clothes by teacher, Class 9 girl sets herself ablaze
Forced to remove clothes by teacher, Class 9 girl sets herself ablaze Twitter

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி, தேர்வில் காப்பி அடித்ததாக ஆசிரியை கருதியுள்ளார்.

மாணவியின் சீருடையில் காகிதச் சீட்டுகளை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட ஆசிரியர், வகுப்பறைக்கு அருகே உள்ள அறைக்கு மாணவியை அழைத்து சென்ற ஆடையை கழற்றி சோதனையிட்டுள்ளார்.

மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளார். இந்நிலையில், ஆசிரியை தன் உடைகளை கழற்றி சோதனை செய்ததால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

பள்ளியில் தேர்வு முடிந்து மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

தகவல்களின்படி, சிறுமிக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 Forced to remove clothes by teacher, Class 9 girl sets herself ablaze
உடுமலை: மகனுடன் பேச பள்ளி மாணவியை வற்புறுத்திய ஆசிரியர்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், பெண் கண்காணிப்பாளர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், தனது சீருடையில் காகிதச் சீட்டுகளை மறைத்து வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய ஆடைகளை கழற்றச் செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

ஆசிரியர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த விவகாரம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரி கூறினார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே, அவமானம் தாங்க முடியாமல் அந்த மாணவி தீக்குளித்ததாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com