மக்களவையில் விலைவாசி குறித்த விவாதத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது ஹேண்ட் பேகை எடுத்து மறைத்து வைத்த வீடியோ டிவிட்டரில் வைரலானது.
பேசப்பட்ட அந்த வீடியோவில், மஹுவா வைத்திருந்தது பிரபல லூயி விட்டான் நிறுவனத்தின் பையாகும். இதன் மதிப்பு 1.5 லட்ச ரூபாய். மக்கள் விலைவாசியால் அவதிப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசும் போது மஹுவா தனது ஹேண்ட் பேகை மறைத்து வைத்த காட்சிகள் வைரலானது.
இதை பாசாங்குத்தனம் என இணைய வாசிகள் தொடர்ந்து அவரை ட்ரோல் செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் முதல் நாள் மக்களவைக்கு வந்தது முதல் இதுவரை ஹேண்ட் பேக் எடுத்து வந்த புகைப்படங்களை ஒன்றிணைத்து ஒரு பதிவாக டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
2019ல் இருந்தே நாடாளுமன்றத்திற்கு ஹேண்ட் பேக் உடன் தான் வருகிறேன் என தெரிவித்திருக்கிறார் மஹுவா.
" பேக் உடன் வருவேன், பேக் உடன் வெளியே செல்வேன்" என்ற தலைப்போடு அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
மஹுவா ஹேண்ட் பேகை மறைத்து வைக்கும் வீடியோ வைரலான நிலையில், அவரது இந்த பதிலடியும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust