காஷ்மீர் : பொட்டு வைக்க கூடாது; ஹிஜாப் அணிய கூடாது - 2 பெண் குழந்தைகளை தாக்கிய ஆசிரியர்

பள்ளிக்கு பொட்டு மற்றும் ஹிஜாப் அணிந்து சென்ற இரண்டு மாணவிகளை அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
jammu kashmir
jammu kashmirTwitter
Published on

ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி செயல்படுகிறது. அங்கு மதச் சின்னங்களான பொட்டு மற்றும் ஹிஜாப் அணிந்ததற்காக 2 பெண் குழந்தைகளைத் தாக்கியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது நான்காம் வகுப்பு மாணவிகள் - ஒருவர் நெற்றியில் பொட்டு வைத்து வந்துள்ளார், மற்றொருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். அம்மாணவிகளை வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

Hijab issue
Hijab issueTwitter

இந்து மற்றும் முஸ்லீம் ஆகிய மதத்தை சேர்ந்த இரு சிறுமிகளின் பெற்றோர்கள் கூட்டாக மாணவிகள் தாக்கப்பட்டது குறித்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் நெற்றியில் பொட்டு வைத்ததற்காகவும், ஹிஜாப் அணிந்ததற்காகவும் பெண் குழந்தைகள் தாக்கப்பட்டுள்ள விவகாரம் ஒரு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என்று தெரிவித்தனர். மேலும் பல மாநிலங்களில் வெடித்த ஹிஜாப் சர்ச்சை தற்போது ஜம்மு காஷ்மீரில் தலைத்தூக்கியுள்ளது என்று கூறினார்.

தனது பெண் குழந்தை தாக்கப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று தெரிவித்த அவர் உ.பி., பீகார், கர்நாடகா போன்று காஷ்மீர் மாற அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

jammu kashmir
ஹிஜாப் விவகாரம்: மாணவியை பாராட்டிய அல்கொய்தா தலைவர்.. பதிலடி கொடுத்த தந்தை

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, ரஜோரி மாவட்ட நிர்வாகம் ஆசிரியருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து நசீர் அகமதுவை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com