ராஜஸ்தான் கலவரம் : 15 இஸ்லாமியர்களைக் காப்பாற்றிய இந்து பெண்

கலவரத்தில், தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற 15 இஸ்லாமிய ஆண்களை, ஒற்றை ஆளாகக் காப்பாற்றியிருக்கிறார் 48 வயது பெண் மதுலிகா சிங்.
Madhulika Singh
Madhulika SinghTwitter
Published on

ராஜஸ்தான் மாநிலம் கரெளலியில் ஏப்ரல் 2-ம் தேதி இந்து முஸ்லிம் சமூகத்தினரிடையே கலவரம் வெடித்தது. இதில் 35 பேர் காயமடைந்தனர். வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.

கரெளலியின் சந்தைப் பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி, இந்து மத ஊர்வலம் நடைப்பெற்றது. அப்போது பைக்கில் வந்த கும்பல் ஒன்று, இஸ்லாமியர்கள் பகுதியைக் கடக்கும்போது, இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் சில கல்லெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கலவரம் வெடித்திருக்கிறது.

இந்தக் கலவரத்தில், தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற 15 இஸ்லாமிய ஆண்களை, ஒற்றை ஆளாகக் காப்பாற்றியிருக்கிறார், சந்தையில் துணிக்கடை வைத்திருக்கும் 48 வயது பெண் மதுலிகா சிங்.

Madhulika Singh
Madhulika SinghTwitter

கலவரக்காரர்களுக்கு பயந்து ஓடி வந்த 15 பேரும், மதுலிகாவின் கடைக்குள் வந்திருக்கின்றனர். கடை இருக்கும் அதே கட்டடத்தின் மாடியில் இருக்கும், தனது வீட்டுக்குள் 15 பேரையும் அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார் மதுலிகா.

பதுங்கியிருப்பது தெரிந்து, கலவரக்காரர்கள் மதுலிகாவின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டிருக்கின்றனர். ஆனால், தனியொரு ஆளாக நின்று அவர்களை, வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து 15 பேரையும் பாதுகாத்திருக்கிறார். அவர்களுக்கு டீ கொடுத்து, கலவரம் அடங்கும் வரை சாந்தப்படுத்தியிருக்கிறார்.

karauli
karauli Twitter
Madhulika Singh
KGF 2 box office : ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ‘கே.ஜி.எஃப்2’

இது குறித்து மதுலிகா கூறியதாவது, “ திடீரென சந்தையில் அலறல் சத்தம் கேட்டது. அனைவரும் கடைகளின் ஷட்டர்களை அடைக்கும் சத்தம் கேட்டது. சில கடைகள் தீப்பிடித்து எரிந்தன. சில கடைகளுக்குள்ளிருந்து பொருட்களைத் திருடிச் சென்றனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க பயந்து ஓடி வந்தனர். அவர்களை எனது வீட்டுக்குள் வைத்து காப்பாற்றினேன். அவர்கள் வெளியில் இருந்திருந்தால் நிச்சயம் பயங்கரமாக தாக்கப்பட்டிருப்பார்கள். இங்கு பல காலமாக இந்து, முஸ்லிம்கள் இணைந்துதான் தொழில் நடத்தி வருகிறோம். எல்லாவற்றையும் விட மனிதநேயம் பெரிது என்பதால் அவர்களைக் காப்பாற்றினேன்” என்று நல்லிணக்க பாடம் எடுக்கிறார் மதுலிகா சிங்.

இப்போது வரை கரெளலியில் இயல்பு நிலை திரும்பவில்லை. காங்கிரஸும், பாஜக-வும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com