கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்!

இந்த மழைக்காலத்தில் செழிப்பான மலைகள், பரபரப்பான நகரங்கள் முதல் பழமையான கோவில்கள் வரை நாம் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்!
கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்! Twitter
Published on

தென்னிந்திய மாநிலங்களில் அழகான இயற்கை நிலப்பரப்பைக் கொண்ட மாநிலம் கர்நாடகா ஆகும். ஆனால் நாம் கேரளாவை கொண்டாடும் அளவு கர்நாடகாவை பற்றி தெரிந்துகொள்ளவில்லை.

புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மதிப்புடைய கர்நாடகாவை விட சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் வேறென்ன இருக்க முடியும்?


இந்த மழைக்காலத்தில் செழிப்பான மலைகள், பரபரப்பான நகரங்கள் முதல் பழமையான கோவில்கள் வரை நாம் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

கூர்க்

குடகு மலை அல்லது கூர்க் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். மழைக் காலத்தில் சென்று வருவதற்கு இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது.
பசுமையான காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள், பிரம்மாண்டமான மலைகள் என இயற்கை ஆர்வளர்களுக்கு சிறந்த இடமாக இருக்கும்.
பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர்வீழ்ச்சி மற்றும் நாகர்ஹோல் தேசிய பூங்கா போன்ற இடங்களை நிச்சயமாக பார்வையிட வேண்டும்.

கூர்க் பற்றி மேலும் தெரிந்துகொள்ள:

சிக்மகளூர்

கர்நாடகாவில் உள்ள பிரபலமான மலை இந்த சிக்மகளூர். ட்ரெக்கிங் செய்வதற்கும், நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கும் சிறந்த இடம்.
அமைதியான சூழலில் ரிலாக்ஸாக இருக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்ற இடமாக இருக்கும்.
பாபா புடாங்கிரி, பத்ரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஹெப்பே நீர்வீழ்ச்சிகள் ஆகிய இடங்களை மிஸ் செய்யாமல் பார்க்கவும்.

அகும்பே

ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் தான் அகும்பே. மிகவும் அழகான, பலவகையான உயிர்கள் வாழக் கூடிய நிலப்பகுதியாக அகும்பே இருந்திருக்கிறது.

பாதாமி

குகைக் கோயில்கள், பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலை மற்றும் பழங்கால நினைவுச்சின்னங்களைப் பார்வையிடுவதில் விருப்பம் உள்ளவர் என்றால் உங்களுக்கான இடம் பதாமி தான்.
இந்த பாதாமி குகைக் கோயில்கள், அகஸ்தியர் ஏரி மற்றும் பாதாமி கோட்டை ஆகிய இடங்களை நிச்சயம் பார்வையிட வேண்டும்.

பிளிகிரிரங்கன் மலைகள்

இது அதிகமாக மற்றவர்கள் அறிந்திடாத சுற்றுலாத்தளம். சாகச விரும்பிகள் செல்ல வேண்டிய இடம்.
பசுமையான காடுகளுக்கு மத்தியில் ட்ரெக்கிங், கேம்பிங் மற்றும் சுற்றிப்பார்பதற்கு ஏற்ற இடம். இங்கு வருபவர்கள் இங்குள்ள பழங்குடி மக்கள் பற்றியும் அதிகமாக தெரிந்துகொள்ள முடியும்.
பிளிகிரி ரங்கசுவாமி கோவில் மற்றும் BRT வனவிலங்கு சரணாலயம் போன்ற இடங்களை நிச்சயம் பார்வையிடலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com