கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததால் அந்த மாநிலத்தில் பல பிரச்சனைகள் எழுந்தன. மாணவர்கள் போராட்டத்தில் தொடங்கி கலவரங்கள் வரை நடைபெற்று முடிந்தது. நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம், "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதும் அல்ல" எனக் கூறி ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். "எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்குச் செல்ல மாட்டோம்" என மானவிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நடத்த உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்காத உச்ச நீதிமன்றம் ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு மனுவை பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறது.