அரசு பேருந்தில் லேப்டாப் பயன்படுத்திய நபர் : கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டர் - எங்கே?

சுற்றறிக்கையின்படி, டிவி, குளிர்சாதனப் பெட்டி, டெஸ்க்டாப் போன்ற மின்னணு சாதனங்களுக்கு தூரத்தின் அடிப்படையில் ரூ.5 முதல் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என டிப்போ பிரிவு கட்டுப்பாட்டாளர் சீனையா தெரிவித்திருந்தார்.
அரசு பேருந்தில் மடிக்கணினி பயன்படுத்திய நபர் (Rep)
அரசு பேருந்தில் மடிக்கணினி பயன்படுத்திய நபர் (Rep)Twitter
Published on

அரசு பேருந்தில் மடிக்கணினி பயன்படுத்தியத்தற்காக இளைஞர் ஒருவர் கூடுதலாக பணம் செலுத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் இருந்து ஹூப்பள்ளிக்கு அரசு பேருந்தில் பயணித்த பயணியிடம், கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு டிரைவர் மற்றும் கண்டக்டர் கேட்டுள்ளனர்

காரணம் கேட்ட அந்த நபரிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) பிறப்பித்த உத்தரவை கூறி கூடுதலாக இந்த 10 ரூபாயை கேட்டுள்ளனர்.

30 கிலோ எடையை தாண்டாத வரையில் இலவசமாக எடுத்துச் செல்லக்கூடிய சாமான்களின் பட்டியலில் மடிக்கணினிகள் குறிப்பிடப்படவில்லை என்று அவர் விளக்கினார்.

இருந்த போதிலும் நடத்துனர்களும் அதிகாரிகளும் கூடுதல் தொகையை வசூலிக்கத் தவறினால், அபராதம் விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் என்னிடம் கூறப்பட்டது, என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் உண்மையில் அந்த மடிக்கணினி பயன்படுத்தியதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அரசு பேருந்தில் மடிக்கணினி பயன்படுத்திய நபர் (Rep)
அரபு உலகம் : பேருந்து பயணத்தில் சூயிங்கம் சாப்பிட்டால் 4000 ரூபாய் அபராதம் – எங்கு?

சுற்றறிக்கையின்படி, லக்கேஜ்களுக்கான தற்போதைய வழிகாட்டுதல்களில் சில மாற்றங்களை KSRTC அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சுற்றறிக்கையில், சாமான்கள் கொள்கையை எளிமைப்படுத்தும் ஒரு வெளிப்படையான முயற்சியில், ஒரு பயணி கூடுதல் கட்டணம் செலுத்தாமல் 30 கிலோ வரை எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று கூறுகிறது.

அனுமதிக்கப்பட்ட பொருட்களில் சில சூட்கேஸ்கள், பைகள், மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தேங்காய் ஆகியவை அடங்கும்.

இருப்பினும், இந்த மடிக்கணினிகள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ்களை ஒரு பயணி வைத்திருக்கக்கூடிய பொருட்களின் பட்டியலிலிருந்து விட்டுவிட்டதாகத் தெரிகிறது

சுற்றறிக்கையின்படி, டிவி, குளிர்சாதனப் பெட்டி, டெஸ்க்டாப் போன்ற மின்னணு சாதனங்களுக்கு தூரத்தின் அடிப்படையில் ரூ.5 முதல் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என கடக் டிப்போ பிரிவு கட்டுப்பாட்டாளர் சீனைய்யா தெரிவித்திருந்தார்.

இருப்பினும், மடிக்கணினிகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மடிக்கணினிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசு பேருந்தில் மடிக்கணினி பயன்படுத்திய நபர் (Rep)
Flipkart: கேமிங் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு வந்த கருங்கல் - ஷாக்கான வாடிக்கையாளர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com