பயணக்காதலர்களுக்கு புதிய இடங்களை தேடித் தேடி பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். யாரும் அதிகம் பார்க்காத இடங்களுக்கு சென்று வருவதில் முனைப்பாக இருப்பார்கள்.
மனித ஆரவாரத்திலிருந்து சற்றே அமைதியான சூழலை அனுபவிப்பதற்கு கூட இப்படி அதிகம் அறிந்திடாத இடங்களுக்கு அவர்கள் செல்கிறார்கள் என்று சொல்லலாம்!
அப்படி இந்தியாவிலும் பல இடங்கள் இன்னும் பரவலாக அறியப்படாமல் இருக்கின்றன. கர்நாடகாவில் இருக்கும் ஒரு சில unexplored இடங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் துங்கபத்ரா நதியின் வடக்கு கரையில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். வரலாற்று சிறப்புமிக்க ஹம்பி நகரத்தை விடவும் பழமையானது ஆனெகுந்தி கிராமம். ராமாயண காலத்தில் குரங்குகளின் தேசமாக ஆனேகுந்தி இருந்தது எனக் கூறப்படுகிறது.
இங்குள்ள பம்பா சரோவர் (நதி), அரமணே (அரண்மனை), கமல் மஹால், ஹுச்சபயன மாதா கோவில், நவ பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்கள் நிச்சயம் பார்க்கவேண்டியவை
இதுவே கர்நாடகாவின் மிக உயர்ந்த சிகரம். கடல்மட்டத்திலிருந்து 1930 மீட்டர் மேலே இருக்கிறது இந்த சிகரம். முல்லப்ப சாமி என்ற துறவியின் நினைவாக இந்த சிகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், சிகரத்தின் உச்சியில் ஒரு சிறிய கோவிலும் இருக்கிறது
கர்நாடகாவில் டிரெக்கிங் செய்ய மிகச் சிறந்த இடமாக கருதப்படுகிறது முல்லயனகிரி சிகரம்.
மணிபாலிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில், பெயருக்கு ஏற்றார்போலவே ரகசியமாய் அமைந்திருக்கிறது இந்த ஓட்டினேனே பீச். இது மற்ற கடற்கரைகள் போல அல்ல. நதி கடலை சேரும் இடம் இந்த ஓட்டினேனே பீச்
அதிக மனித வாடை படாத இந்த கடற்கரை மனதிற்கு அமைதியான சூழலை தருகிறது
கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த இடம் முதலில் வாதாபி என்று அழைக்கப்பட்டது. வரலாறு சிறப்புமிக்க இந்த பதாமி நகரம், பதாமி சாளுக்கியர்களின் தலைநகராக இருந்தது. பதாமி இங்கு அமைந்துள்ள கற்கோவில்களுக்காக பிரபலம்.
ஆனால் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடமாகவும் இருக்கிறது
கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சன்னபட்னா. கர்நாடகாவின் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களில் ஒன்று இந்த சன்னபட்னா. இதனை பொம்மைகளின் நகரம் என அழைக்கின்றனர். காரணம் இங்கு மர பொம்மைகள் அதிகமாக தயாரிக்கப்படுகிறது.
இதை தவிர இங்கு இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்களும் இருக்கிறது.
வடக்கு கர்நாடகாவில் அமைந்துள்ள, அதிகம் மக்களால் அறியப்படாத இடங்களில் ஒன்று இந்த பனவாசி கோவில். பழமையான இந்த நகரம் கர்நாடகாவை ஆண்ட கடம்பா வம்சத்தின் தலைநகராக இருந்தது, மேலும் கன்னடம் பேசும் பரம்பரையின் முதல் பூர்வீகப் பேரரசாகவும் இருந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust