கர்நாடகா: முதல்வர் பதவி இந்த பெரும் பணக்காரருக்கு தானா? - DK சிவக்குமார் பற்றித் தெரியுமா?

தேர்தலில் தோல்வி என்பது இவருக்கு சாமானியமானதல்ல. சாந்தனூரில் 1994, 1999, 2004 என அடுத்தடுத்து வெற்றிகளைக் கண்டார். 2008 முதல் எல்லாத் தேர்தல்களிலும் கனகாபுரத்தில் வெற்றி பெற்று வருகிறார்.
கர்நாடகா: முதல்வர் பதவி இந்த பெரும் பணக்காரருக்கு தானா? - DK சிவக்குமார் பற்றித் தெரியுமா?
கர்நாடகா: முதல்வர் பதவி இந்த பெரும் பணக்காரருக்கு தானா? - DK சிவக்குமார் பற்றித் தெரியுமா?Twitter
Published on

நம் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. பெரும்பாண்மையைப் பெற 113 சீட்டுகள் தேவை என்ற நிலையில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்துவிட்டது எனலாம். 

கர்நாடக காங்கிரஸின் தலைவராக இருக்கும் டி.கே சிவக்குமார் முதல்வர் பதவியை எட்டுவார் எனப் பலரும் கருதி வருகின்றனர்.  ஏனென்றால் வாக்களித்தபடி காங்கிரஸை கர்நாடகாவில் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியுள்ளார். 

குமாரசாமி ஆட்சியில் நீர்ப்பாசன அமைச்சராக இருந்தவர் டி.கே சிவக்குமார். மற்றொரு முதல்வர் வேட்பாளராக கருதப்படும் சித்தராமையா ஆட்சியில் மின்சாரத்துறை பொறுப்பில் இருந்தார்.

கனகபுரா தொகுதி எம்.எல்.ஏவான இவரது அண்ணன் டி.கே சுரேஷும் ஓர் அரசியல்வாதியே. இவருக்கு ஐஸ்வர்யா, அபர்னா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளான ஐஸ்வர்யா கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் மகனை திருமணம் செய்துள்ளார். பெரிய இடத்தில் திருமணம் செய்வதிலிருந்தே கவனித்திருக்கலாம் இவரும் ஒரு பெரும் பணக்காரரே.

1980களில் காங்கிரஸின் மாணவர் அணியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் டி.கே.சிவக்குமார். 27 வயதில் இளம் அரசியல்வாதியாக மைசூரு சாந்தனூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் தோல்வி என்பது இவருக்கு சாமானியமானதல்ல. சாந்தனூரில் 1994, 1999, 2004 என அடுத்தடுத்து வெற்றிகளைக் கண்டார். 2008 முதல் எல்லாத் தேர்தல்களிலும் கனகாபுரத்தில் வெற்றி பெற்று வருகிறார். 

2018ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைப்பதில் முக்கியப்பங்கு வகித்தார்.  காங்கிரஸின் பெருந்தலைகளான சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் நல்லுறவைப் பேனிவருகிறார்.

முன்னதாகவே கூறியது போல இவர் இந்தியாவின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர். 2018ம் ஆண்டு கணக்குப்படி இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 840 கோடி.

கர்நாடகா: முதல்வர் பதவி இந்த பெரும் பணக்காரருக்கு தானா? - DK சிவக்குமார் பற்றித் தெரியுமா?
கர்நாடகாவில் முற்றிய ஹிஜாப் விவகாரம் - முழு விவரம்

கடந்த மாதம் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் போது இவரது சொத்துமதிப்பு 1400 கோடியாக உயர்ந்தது தெரியவந்துள்ளது. 

இவருக்கு விவசாயம், சொத்துகளின் வாடகை, பிறரது வியாபாரத்தில் உள்ள பங்குகள், தங்கம், வாட்ச்கள் மற்றும் சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்கிறது.

இவருக்கு 12 வங்கிகளில் கணக்கு உள்ளது 225 கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. 

கர்நாடகா: முதல்வர் பதவி இந்த பெரும் பணக்காரருக்கு தானா? - DK சிவக்குமார் பற்றித் தெரியுமா?
கர்நாடகா : "இது எங்க நிலம், நான் ஏன் இந்தி பேசணும்" - ஆட்டோ ஓட்டுநரின் வைரல் வீடியோ

ரோலக்ஸ் உள்ளிட்ட பணக்கார பிராண்ட் வாட்ச்கள் வைத்துள்ளார். இவரது அசையும் சொத்துகளின் மதிப்பு மட்டும் 970 கோடி. 2.184 கிலோ தங்கம் இருப்பு வைத்துள்ளார். 

12.6 கிலோ வெள்ளி, 1.066 கிலோ தங்க நகைகள், 324 கிராம் வைரம், 24 கிராம் ரூபிஸ் என சொத்துகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆண்டுக்கு சாதாரணமாக 15 கோடி வருமானம் ஈட்டுகிறார்.

காங்கிரஸில் செல்வாக்கு, அனுபவத்தில் சித்தராமையா உயர்ந்தவராக இருந்தாலும் பண விஷயத்தில் டி.கே.சிவக்குமார் தான் செழிப்பானவர். 

கர்நாடகா: முதல்வர் பதவி இந்த பெரும் பணக்காரருக்கு தானா? - DK சிவக்குமார் பற்றித் தெரியுமா?
கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா? - ஒரு பிளாஷ் பேக்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com