கேரளா : மலை பிளவில் சிக்கியிருந்த இளைஞர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டார்

காலை 9.30 மணி அளவில் இராணுவ வீரர்கள் பாபுவை நெருங்கி அவருக்கு உணவு வழங்கினர். பின்னர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை மேலே தூக்கி வந்தார்.
மீட்கப்பட்ட இளைஞர்

மீட்கப்பட்ட இளைஞர்

Twitter

Published on

கேரளாவில் செங்குத்து மலையின் இடுக்கில் சிக்கி 40 மணி நேரமாக உயிருக்குப் போராடி வந்த இளைஞர் மீட்கப்பட்டார். இராணுவம் மற்றும் NDRF உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியுற்றதை அடுத்து விமானப்படையினர் இன்று காலை களத்தில் இறங்கினர்.

கடந்த திங்கட்கிழமை 23 வயதான மலம்புழா, சேரடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாபு அவரது மூவருடன் எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி மலையில் மலையேறியுள்ளார். அப்போது குறுகிய பாதை வழியாக போய்க் கொண்டிருந்த பாபு தவறுதலாக வழுக்கி உள்ளே விழுந்துள்ளார்.

பாபுவின் நண்பர்கள் மலையிலிருந்து இறங்கி, அப்பகுதி மக்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>பாபு</p></div>

பாபு

Twitter

மறுநாளில், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் ம்ருண்மயி ஜோஷியின் (Mrunmai Joshi ) வேண்டுகோளின்படி பாபுவை விமானத்தில் ஏற்றிச் செல்லும் முயற்சியில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் ஹெலிகாப்டரால் பாபு சிக்கிய செங்குத்தான சரிவுக்கு அருகில் செல்லவோ அல்லது மலை உச்சியில் தரையிறங்கவோ முடியவில்லை. சிக்கல் அவர்கள் நினைத்ததை விடத் தீவிரமானது என புரிந்து கொண்டனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு அந்த இளைஞரைப் பாதுகாப்பாக மீட்க ராணுவத்தின் உதவியை நாடினார். அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் தெற்குப் படையின் லெப்டினன்ட் ஜெனரல் அருண், விரைவில் பெங்களூரிலிருந்து ஒரு சிறப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வரும் என்று முதல்வர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மீட்பு பணியினர்</p></div>

மீட்பு பணியினர்

Twitter

மலையேறுதல் மற்றும் மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற ராணுவ குழுவும் தமிழகத்தின் வெலிங்டனிலிருந்து மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மற்றொரு குழுவும் நேற்று மாலையில் பாலக்காட்டுக்குப் புறப்பட்டது.

இன்று காலையில் ராணுவம் தவிர, விமானப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கடலோர காவல் துறையினரும் NDRF வீரர்களும் உதவினர். பாபுவின் அசைவுகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டன. பாதுகாப்புப் படையினரின் கூட்டு முயற்சியால், காலை 9.30 மணி அளவில் இராணுவ வீரர்கள் பாபுவை நெருங்கி அவருக்கு உணவு வழங்கினர். பின்னர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை மேலே தூக்கி வந்தார். பாபுவை மலை உச்சியில் இருந்து விமானம் மூலம் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com