Kerala Blast: ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் - எர்ணாகுளம் குண்டு வெடிப்பில் நடந்து என்ன?
Kerala Blast: ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் - எர்ணாகுளம் குண்டு வெடிப்பில் நடந்து என்ன?twitter

Kerala Blast: ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் - எர்ணாகுளம் குண்டு வெடிப்பில் நடந்து என்ன?

இன்று காலை, இந்த மாநாட்டின் பிராத்தனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு சுமார் 2000 பேர் வருகை தந்திருந்தனர்.

கேரளா ஜெபகூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும், கிட்ட தட்ட 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தொடர் குண்டுவெடிப்பு நட்டையே உலுக்கியுள்ளது.

எர்ணாகுளத்தில் களமச்சேரியிலுள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், கடந்த 27 ஆம் தேதி முதல் யெகோவாவின் சாட்சிகள் மண்டல மாநாடு நடந்து வருகிறது

இந்நிலையில், இன்று காலை, இந்த மாநாட்டின் பிராத்தனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு சுமார் 2000 பேர் வருகை தந்திருந்தனர்.

அந்த சமயத்தில் திடீர் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன, மொத்தம் மூன்று இடங்களில் குண்டுவெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

உள்ளூர் செய்தி தொடர்பாளர்களின் அறிக்கையின் படி, பிரார்த்தனை நடந்து முடிந்தவுடன் முதல் குண்டு வெடிப்பும், அதனை தொடர்ந்து இரண்டு முறை குண்டு வெடித்துள்ளது.

இது விபத்து அல்ல என டிஜிபி டாக்டர் ஷைக் தர்வேஷ் சாஹேப் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 9.40 மணியளவில் ஏற்பட்டது இந்த குண்டுவெடிப்பு. பிரார்த்தனை முடிந்து ஒரு முறையும், பின்னர் கூடத்தின் வலது இடது புறத்தில் இரண்டு முறையும் குண்டுகள் வெடித்தன.

ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், கிட்ட தட்ட 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களின் நிலை சற்று மோசமாகவே உள்ளது.

முதலாம் கட்ட விசாரணைகளில் IED (improvised Explosive Device-எனப்படும் கையால் உருவாக்கப்பட்ட சக்தி குறைவான வெடிகுண்டு) பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Kerala Blast: ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் - எர்ணாகுளம் குண்டு வெடிப்பில் நடந்து என்ன?
கசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - நடுங்க வைக்கும் தகவல்கள்!

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என கூறப்படுகிறது.

எல்லா கோணங்களில் இருந்தும் விசாரணைகள் நடத்தி இதன் பின்னால் இருப்பவர்களை கண்டறிவோம்" என டிஜிபி கூறியுள்ளார்.

இது குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததாவது

"இது ஒரு எதிர்பாராத மோசமான நிகழ்வு. காவல்துறையினர் இச்சம்பவத்தை மிக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாநில காவல்துறை டி.ஜி.பி உட்பட உயர் அதிகாரிகள் கொச்சிக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயனை தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளா மாநிலம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Kerala Blast: ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் - எர்ணாகுளம் குண்டு வெடிப்பில் நடந்து என்ன?
ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு : கனடாவில் சுட்டுக் கொலை ரிபுதமன் சிங் மாலிக் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com