மாதம் சுமார் 20,000 ஆயிரம் சம்பாதித்து தன் குடும்பத்தை நடத்தி வந்த ஒரு ஆட்டோக்காரருக்கு 25 கோடி ரூபாய் லாட்டரி விழுந்த செய்தி நம்மை பூரிக்க வைத்தது. வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த பலருக்கு பொறாமையும் ஏக்கமும் எழுந்தது. செய்தி வெளியாகி ஒரு வாரகாலம் ஆன நிலையில் அவரது அதிர்ஷ்டத்தின் மறுபுறம் என்னவென்று வீடியோ வெளியிட்டுக் காட்டியிருக்கிறார்.
லாட்டரியில் வென்ற அனூப் ஒரே நாளில் கோடீஸ்வரராகவும் மீடியா கவரேஜால் புகழ்பெற்றவருமான போதிலும் அவர் சமீப காலமாக அனுபவித்து வரும் அவல நிலைக் குறித்தே அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
"ஒவ்வொரு நாளையும் கடக்கும் போது எனக்கு அவதி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நான் எனது வீட்டை விட்டுக் கூட வெளியில் வர முடிவதில்லை. எல்லாரும் என்னை அடையாளம் கண்டுவிடுகின்றனர், மாஸ்க் அணிந்திருந்தாலும் கூட.
மற்றவர்கள் கண்ணிலிருந்து தப்பிக்க நான் இருக்கும் இடத்தை மாற்றி, ஒவ்வொரு உறவினர்கள் வீடுகளுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறேன். என் வீட்டில் கூட என்னால் நுழையமுடியவில்லை. எப்போதும் வாசலில் கூட்டமாக சேர்ந்துவிடுகிறார்கள். எல்லாரும் பண உதவிக் கேட்கிறார்கள். எனக்கு இன்னும் பணம் கூட வந்து சேரவில்லை." என அந்த வீடியோவில் வேதனையுடன் பேசியிருந்தார் அனூப்.
"கோடீஸ்வரனான போதிலும் என்னால் என்வீட்டுக்கு கூட போக முடியவில்லை. நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்மகனுக்கு உடல்நிலை சரியில்லை அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட முடியவில்லை. என் அதிர்ஷ்டத்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட நிம்மதி இழந்திருக்கிறார்கள். எப்போதும் வீட்டுக்கு முன்னால் கூட்டமாக மக்கள் நிற்கின்றனர்." எனவும் பேசியிருந்தார் அனூப்.
மேலும் தான் சாதாரண ஒருவன் என்றும் தனக்கு வரி விவரங்கள் எதுவும் கூட தெரியாது என்றும் கூறியுள்ளார் அனூப். "என் கைக்கு பணம் வந்ததும் நான் அதனை வங்கியில் போட்டு சேமித்து விடுவேன். 2 வருடங்களாவது கடந்து பின்பு தான் அதனை செலவு செய்வேன்" என்கிறார்.
அதிகமாக பணம் பெறும் ஒருவரை மீடியாக்களும் மற்றவர்களும் நிம்மதியாக கூட இருக்க விடவில்லை என்ற கருத்தை முன்வைத்தே அவர் பேசிருந்தார். தற்போது லாட்டரியில் 3வது பரிசோ அல்லது ஓணம் பண்டிகை லாட்டரி பரிசோ பெற்றிருக்கலாம் என்று எண்ணுவதாக கூறுகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust