டேட்டிங் ஆப் என்று சொன்னதும், காதலிப்பதற்காக, காதலர்களைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி என்பார்கள். ஆனால் பாதி பேர் இந்த ஆப்பை பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறார்கள், அதாவது வேடிக்கை பார்க்கவும், வேவு பார்க்கவும் தான் அந்த ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.
இங்கு ஒருவர் சற்று ஒரு படி மேலே சென்று வீடு வாடகைக்குக் கிடைக்குமா? என்று பதிவிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளைஞர் bumble என்ற டேட்டிங் ஆப்பில் வாடகைக்கு வீடு வேண்டும் என தன்னுடைய bio-ல் குறிப்பிட்டிருக்கிறார்.
மும்பையில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த இளைஞரின் பதிவை Ana de Aamras என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்கீரின்ஷாட்டாக பகிர்ந்திருந்தார்.
அதில், “எனக்கு இந்தி தெரியாது, மும்பையின் வெஸ்டர்ன் லைனில் வாடகைக்கு வீடு கிடைக்க எனக்கு உதவி செய்யுங்கள், அந்தேரியில் புரோக்கர் செலவு இல்லாமல் வாடகைக்கு வீடு இருந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள். புரோக்கர் சார்ஜ் கேட்டாலும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்
இந்த ஸ்கீரின்ஷாட்டை பார்த்த நெட்டிசன்கள், ’இது நல்ல idea வாக உள்ளது ’டேட்டிங் ஆப்பில் ஒரு நாளைக்குப் பயனாளர்களின் பயோவை நிறையப் பேர் பார்ப்பார்கள். அதன் மூலம் ரூம் மேட் அல்லது பிளாட் மேட்ஸ் உங்களுக்கு கிடைப்பார்கள்” என டிவிட்டர் பயனர் பதிவிட்டுள்ளார்.
மேலும், புரோக்கர் சார்ஜை தவிர்க்க மும்பைக்காரர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்றும் மற்றொரு பயனர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஸ்கீரின்ஷாட் டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp