கேரளா : 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்த தம்பதி - ஏன்?

சுக்கூர் ஷீனாவுக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜோசா மற்றும் பாத்திமா ஜெபின் என மூன்று மகள்கள் உள்ளனர்
கேரளா : 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்திகொண்ட தம்பதி - ஏன்?
கேரளா : 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்திகொண்ட தம்பதி - ஏன்?ட்விட்டர்
Published on

தங்களது மகள்களுக்கு முழு சொத்தும் கிடைக்கவேண்டும் என்பதற்காக 29 ஆண்டுகளுக்கு பிறகு, சர்வதேச மகளிர் தினமான நேற்று மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் கேரளாவை சேர்ந்த தம்பதி.

கேரளா காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் சுக்கூர். 53 வயதாகும் இவர் திரைப்பட நடிகர் மற்றும் வழக்கறிஞர். இவரது மனைவி டாக்டர் ஷீனா. ஷீனா மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். சுக்கூர் ஷீனாவுக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நிகழ்ந்தது.

இவர்களுக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜோசா மற்றும் பாத்திமா ஜெபின் என மூன்று மகள்கள் உள்ளனர்.

சுக்கூர் ஷீனாவின் திருமணமானது பணக்காடு ஹைதர் அலி ஷிஹாப் தங்கல் தலைமையில், இஸ்லாமிய தனி நபர் ஷரியத் முறைப்படி நடந்தது.

இந்த சட்டத்தின்படி, ஆண் வாரிசு இல்லாத இஸ்லாமிய தம்பதிகளின் மகள்களுக்கு சொத்தை வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி, சுக்கூரின் மகள்களுக்கு அவரது சொத்துகளில் இருந்து மூன்றில் இரண்டு பங்குகள் தான் செல்லும். மீதி சொத்துக்கள் சுக்கூரின் சகோதரர்களுக்கு செல்லும்.

இதில் விருப்பமில்லாத தம்பதி, மகள்களுக்காக மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்

கேரளா : 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்திகொண்ட தம்பதி - ஏன்?
கரூர் : திருமணம் செய்து கொண்ட உயரம் குறைவான மாற்றுத்திறன் ஜோடி - மணமகன் நெகிழ்ச்சி!

சுக்கூர் மற்றும் ஷீனா தம்பதி, சிறப்பு திருமண சட்டத்தின்படி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தை, சர்வதேச மகளிர் தினமான நேற்று (மார்ச் 8ஆம் தேதி) இவர்கள் செய்துகொண்டனர். திருமணத்தின் போது இவர்களது மகள்களும் இருந்தனர்.

“நாங்கள் இஸ்லாமியத்தை கடைப்பிடித்து வருகிறோம் என்பதற்காக எங்கள் மகள்களுக்கு எங்கள் சொத்து கிடைக்கக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது பாரபட்சமாகும். மற்ற மதங்களில் எங்கள் மகள்களின் வயதையொத்த பெண் பிள்ளைகளுக்கு பெற்றோரின் சொத்தில் சம பங்கு இருக்கிறது. இந்த சொத்தை பெறுவது அவர்களது உரிமை. அதை நான் தடுக்க விரும்பவில்லை” என்றார் சுக்கூர்

கேரளா : 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்திகொண்ட தம்பதி - ஏன்?
இந்தியரை திருமணம் செய்து விவசாயம் பழகும் ஆஸ்திரேலிய பெண் - ஓர் உன்னத காதல்!

”எங்கள் மகள்களின் மரியாதையை காக்க நாங்கள் இதனை செய்கிறோம். இந்திய அரசியல் சட்டம் அவர்களுக்கு கொடுக்கும் உரிமையை நாங்கள் பறிக்க விரும்பவில்லை.

மேலும் சொத்துகளை பெறுவதில் ஆண் பெண் என்கிற பேதம் என் மகள்களின் நம்பிக்கையை குலைத்துவிடக்கூடாது. அனைவரும் சமம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு வழங்க விரும்புகிறோம்" என்றார் ஷீனா.

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டுவிட்டால், சொத்துகளை மகள்களுக்கு கொடுப்பதில் சிக்கல்கள் இருக்காது எனவும், தங்கள் மகள்களின் பெயர் மற்றும் ஆதார் அட்டை தகவல்களும் தங்களது திருமண பதிவில் சேர்க்கப்படும் என சுக்கூர் தெரிவித்திருக்கிறார்.

கேரளா : 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்திகொண்ட தம்பதி - ஏன்?
"இவரது நேர்மை வியக்க வைக்கிறது" - மனதை நெகிழவைத்த 201 ரூபாய்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com