கேரள மாநிலத்தில் மாணவர்கள் பாலின பாகுபாடின்றி நடந்துகொள்வதை எதிர்த்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு புகைப்படத்தின் மூலம் மாணவர்கள் பதிலடி கொடுத்திருப்பது வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் ஆண், பெண் இருபால் மாணவர்களும் ஒன்றாக அமர்வதை தவிர்க்க உள்ளூர் மக்கள் பேருந்து நிறுத்தத்தில் இருந்த 3 இருக்கைகளை நீக்கிய சம்பவம் நடந்துள்ளது.
வழக்கமாக அந்த இருக்கையில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் ஆண் - பெண் என்றில்லாமல் சேர்ந்து அமர்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இருக்கைகளை நீக்கியதால் கோபமடைந்த மாணவர்கள், அமைதி போராட்டமாக, இருந்த தனித்தனியான இருக்கைகளில் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்திருப்பது போல புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
மாணவர்களின் இந்த நடவடிக்கைக்கு திருவனந்தபுரம் மேயர் எஸ்.இராஜேந்திரன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் உள்ளூர் வாசிகள், மாணவர்கள் பேருந்து நிலையத்திலும், மாலை வேளையிலும் ஒன்றாக இருப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த மூன்று இருக்கைகளை கொரோனா காரணமாகவே நீக்கியதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
மாணவர்களின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து அந்த பகுதிக்குச் சென்ற மேயர் ராஜேந்திரன் தனது முகநூலில், " 3 இருக்கைகளை நீக்கியது தேவையில்லாதது. கேரளா போன்ற முற்போக்கு சமூகத்துக்கு பொருத்தமற்றது" எனப் பதிவிட்டுள்ளார்.
மேயர் ராஜேந்திரன் பேருந்து நிலையத்தைப் பார்வையிடும் போது உடனிருந்த மாணவர்கள் அவர்கள் தினசரி அந்த பகுதியில் இருக்கும் போதும் உள்ளூர் வாசிகள் ஒழுக்கக் காவலில் (moral policing) இறங்கிவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கேரளாவில் அடுத்த ஆண்டு முதல் ஆண் - பெண் தனித்தனியான பள்ளிகள் அனைத்தையும் இருபாலர் இணைந்து படிக்கும் பள்ளியாக மாற்றுவதற்கான பேச்சும் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust