கேரளா: 80 வயதான மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்-நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி |video

எலியம்மா மகன் ஜெய்சின் அளித்த புகாரின்பேரில், தற்போது மஞ்சுமோல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமோல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Kerala woman arrested after viral video shows her beating mother-in-law
Kerala woman arrested after viral video shows her beating mother-in-law Twitter

80 வயதான மாமியாரை வீட்டைவிட்டு வெளியேற சொல்லி, நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை மருமகள் கீழே தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் தேவலக்கரை நடுவிலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுமோல் தாமஸ். இவர் கணவர், வயது முதிர்ந்த மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

80 வயதுடைய மாமியாரான எலியம்மா வர்கீஸை, மருமகள் மஞ்சுமோல் தாமஸ் கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த மாமியாரை தள்ளிவிட்டு தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மருமகள் மஞ்சுமோல் தாமஸ், மாமியாரை கைகாட்டி வீட்டைவிட்டு வெளியேற செல்கிறார். அதைக் கேட்காமல் அமர்ந்திருக்கும் எலியம்மாவை, மஞ்சுமோல் ஓடிவந்து கீழே தள்ளிவிடுகிறார். அதில் கொப்புற விழுகிறார் எலியம்மா. இந்த வீடியோ, காண்போரை கண் கலங்கச் செய்கிறது.

அவரது கணவரே இதனை வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில், பாதிப்புக்குள்ளான எலியம்மா வர்கீஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதுகுறித்து தன்னார்வலர்கள் அந்த மூதாட்டியை சந்தித்தபோது கண்ணீருடன் சில சமயம், மருமகள் தன்னை கம்பியால் கூட தாக்குவதாக கூறுகிறார்.

எலியம்மா மகன் ஜெய்சின் அளித்த புகாரின்பேரில், தற்போது மஞ்சுமோல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமோல் மீது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் பிரிவு 24 மற்றும் ஐபிசி 308 (கொலை முயற்சி) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kerala woman arrested after viral video shows her beating mother-in-law
கேரளா: பூமிக்கடியில் இருந்து கேட்கும் மர்மமான ஒலி - அச்சத்தில் கிராம மக்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com