கே எஸ் பாராக் : வேலையை இழந்த இந்தியர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மில்லியனர் ஆன கதை

இப்போது, கே எஸ் பாரக்-இன் ஃபர்ஸ்ட் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் (FVC) நிறுவனம் ஆண்டுக்கு 200 மில்லியன் தினார்கள் வருவாய் ஈட்டுகிறது.
K S Parag

K S Parag

Twitter

பாராக் 1991இல் துபாய் சென்ற போது அவருடைய மாத வருமானம் 2000 தினார்.

இப்போது, கே எஸ் பாரக்-இன் ஃபர்ஸ்ட் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் (FVC) நிறுவனம் ஆண்டுக்கு 200 மில்லியன் தினார்கள் வருவாய் ஈட்டுகிறது.

இந்த நிறுவனம் மென்பொருள் சேவைகளை வழங்குகிறது. மென்பொருள் பாதுகாப்பு, நெட்வொர்க்கிங் கம்யூனிகேஷன்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் முதலான சேவைகளை வழங்குகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் கணினித் தொழில்நுட்பப் பயிற்சிகளையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தை உருவாக்கியதோடு தலைமையேற்றும் நடத்தி வருகிறார் பாராக்.

K S Parag

K S Parag

Facebook

தொடக்கத்தில், 2000 ரூபாய் மாதச் சம்பளத்தில் ஷார்ஜாவின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்தார். தற்போது, அமீரகத்தின் மலைப்பகுதியையொட்டிய பத்தாயிரம் சதுர அடி வில்லா ஒன்றில் ஒன்றில் வசித்து வருகின்றார். அவர் உழைப்புக்கேற்ற பலன் அவருக்குக் கிட்டியுள்ளது.

இந்த வளர்ச்சி ஒரே நாளில் வந்ததில்லை.

இலக்கை நோக்கிய பயணத்தில் அவர் தொடர்ந்து இருந்தார். தணியாத குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அதுவே வெற்றிகரமான தொழில் முனைவோராக அவரை மாற்றியது. இது எளிமையாகக் கிட்டிவிடவில்லை. தொடர் முயற்சியில் கிடைத்த வெற்றியாகும் இது.

K S Parag

ஒரு வாவ் செய்தி - இந்த நாடுகளில் எல்லாம் வரி இல்லை தெரியுமா?

K S Parag

K S Parag

Twitter

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஹைதராபாத் கிராமத்தைச் சேர்ந்த இவர்.1991இல் 21 வயது இளைஞராகக் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார். உடனே துபாய்க்குச் சென்றார். அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது இவரது விருப்பம். அங்கு இவர் எம்பிஏ படிக்க விரும்பினார். இந்தியாவில் இருக்கக்கூடிய மணிப்பால் எம்ஐடி கல்விநிறுவனத்தில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவை உருவாக்கியதும் இதே கல்வி நிறுவனம்தான்.

2000 தினார்கள் மாத ஊதியத்திற்குத் துபாய்யில் வேலைக்குச் சேர்ந்தார். துபாய் வளர்ச்சியை நோக்கிச் செல்ல போகிறது என்பதால், அங்கு வேலையில் சேருமாறு பாராக்-இன் தந்தை அறிவுறுத்தியுள்ளார். வளரக்கூடிய நாட்டுக்கு அதிகப்படியான வளர்ச்சியும் அதனால் நிறைய வாய்ப்புகளும் இருக்கும். அதனால் வேலைக்கும் சேர்ந்துள்ளார்.

இன்றைக்கும் பல ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழக்கூடிய மக்கள், ஷார்ஜாவில் வசித்தும் துபாயில் வேலை பார்த்தும் வருகின்றனர். இது மாபெரும் போராட்டமாகும்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வேறு வேலையிடத்துக்கு மாறினார் பாராக். அடுத்த 8 ஆண்டுகளில் அபுதாபி துபாய் சார்ஜாவில் என மாறி மாறி வேலைசெய்தார். 1999இல் பத்தாயிரம் தினார் ஊதியத்தில் அவரை வேலைக்கு அமர்த்தியது ஒரு நிறுவனம். நிறுவன மறுகட்டமைப்பின் காரணமாக,மூன்று மாதங்களில் பாராக்-இன் வேலை பறிக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்வின் மிகுந்த ஏமாற்றத்தை அளித்த சம்பவம் இது.

சிறப்பான உழைப்பு. நுட்பமான அறிவு. இருந்தும் தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போது ஒரு முடிவெடுத்துள்ளார் பாராக். அடுத்த ஒரு மாத காலத்திற்கு அங்கே வசிப்பதற்கான சேமிப்பு அவரிடம் இருந்தது.அவருடைய மனைவி சங்கீதா ஒத்துழைப்பு நல்கினார். ஷார்ஜாவில் ஒரே அறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பெயர்ந்துள்ளார். அவர் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக இது அமைந்தது.

பிறருக்காக வேலை செய்யும்போது அதிகப்படியான பாதுகாப்பின்மையை உணர்ந்திருக்கிறார். தான் தனித்துவமானவனாகவும் வெற்றியாளனாகவும் முடிவெடுத்துள்ளார். அப்பாவின் பொருளாதார உதவி, சகோதரர் எனக்கென்று உருவாக்கிக் கொடுத்த சிறிய அலுவலகம், மனைவின் ஊதியமில்லாத உழைப்பு இவற்றை மூலதனமாகக் கொண்டு உழைக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.

FVC நிறுவனத்தின் நிறுவனராகத் திறம்பட செயல்பட்டு வருகிறார். தன்னுடைய 27 ஆண்டுகால தகவல் தொழில்நுட்ப துறையின் அறிவை அவர் தன் ஆளுமையால் வெற்றிகரமான நிறுவனமாக்கியுள்ளார். மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க நாடுகளுக்குத் தொழில்நுட்பத்தை வழங்குவதில் முன்னணியில் உள்ளது இவர் நிறுவனம்.

முன்னேறத் துடிக்கும் தொழில்முனைவோருக்கு பாராக்-இன் அறிவுரை : இலக்கை நோக்கிய பயணத்தில் தொடர்ச்சியாக இருங்கள். எதுவும் எளிமையாகக் கிடைக்காது. ஒருநாள் உங்கள் கனவை அடைவீர்கள். கடின உழைப்பே அனைத்துக்குமான திறவுகோல். தரமும் காலத்தையும் மிகச் சரியாகக் கையாண்டால்,வெற்றி உங்களைத் தேடிவரும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com