கட்ச்: பழங்கால நாகரிகமான ஹரப்பான் பகுதியை கண்டுபிடித்த கிராம மக்கள் - எப்படி?

உலகப் பாரம்பரியச் சின்னமான தோலாவிராவிலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு குக்கிராமமான லோத்ரானி, தங்கம் புதைத்திருந்த இடமாக கருதப்பட்டது. இது அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய தூண்டியது.
கட்ச்:  பழங்கால நாகரிகமான ஹரப்பான் பகுதியை கண்டுபிடித்த கிராம மக்கள் -  எப்படி?
கட்ச்: பழங்கால நாகரிகமான ஹரப்பான் பகுதியை கண்டுபிடித்த கிராம மக்கள் - எப்படி?Twitter

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கிராமவாசிகள், தோலாவிராவிற்கு அருகில் பழங்கால நாகரிகமான ஹரப்பான் தளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கிராம மக்கள் தங்கத்தை தேடி அப்பகுதியில் தோண்டியதாக கூறப்படுகிறது.

இப்பகுதியில் தங்கம் புதைந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் இங்குள்ள உள்ளூர்வாசிகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தோண்டும் முயற்சியைத் தொடங்கினர்.

உலகப் பாரம்பரியச் சின்னமான தோலாவிராவிலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு குக்கிராமமான லோத்ரானி, தங்கம் புதைத்திருந்த இடமாக கருதப்பட்டது. இது அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய தூண்டியது.

ஆராய்ச்சி அறிஞர் அஜய் யாதவ் மற்றும் ஆக்ஸ்போர்டின் தொல்லியல் பள்ளியைச் சேர்ந்த அவரது பேராசிரியர் டாமியன் ராபின்சன் தலைமையிலான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பேற்றனர். ஹரப்பான் காலத்து கோட்டையான குடியேற்றத்தை இவர்கள் கண்டுபிடித்தனர்.

கட்ச்:  பழங்கால நாகரிகமான ஹரப்பான் பகுதியை கண்டுபிடித்த கிராம மக்கள் -  எப்படி?
பன்றிகளுடன் செல்ஃபி எடுக்க குவியும் மக்கள் - ஜப்பானின் Mipig கஃபே பற்றி தெரியுமா?

மொரோதாரோ என்று பெயரிடப்பட்ட இந்த தளம், அருகிலுள்ள தோலாவிராவை ஒத்திருக்கும் கட்டிடக்கலை விவரங்களை வெளிப்படுத்தியது. சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய குடியேற்றம், (கிமு 2,600-1,900) பிற்பகுதியில் (கிமு 1,900-1,300) ஹரப்பான் காலகட்டங்களில் செழித்தது. இந்த கண்டுபிடிப்பில் ஹரப்பா மட்பாண்டங்கள் தோலாவிராவில் காணப்படும் கலைப்பொருட்களை நினைவூட்டுகின்றன.

ரான் பாலைவனத்திற்கு அருகாமையில் அமைந்திருப்பதால், பாலைவனமாக மாறிய இப்பகுதி, ஹரப்பன் காலத்தில் செல்லக்கூடியதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கட்ச்:  பழங்கால நாகரிகமான ஹரப்பான் பகுதியை கண்டுபிடித்த கிராம மக்கள் -  எப்படி?
கேரளாவில் ஒரு இந்தி கிராமம் : டார்கெட் வைத்து படிக்கும் கிராம மக்கள் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com