திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தைகள், கரடிகள் வசித்து வருகின்றன. இவை பக்தர்கள் செல்லும் பாதையில் குறிக்கிடுவது அதிகரித்து வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன் சிறுமி ஒருவரை சிறுத்தை தாக்கி அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பியதையும் நாம் அறிவோம்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு அமைத்து 5 சிறுத்தைகளை பிடித்தனர். ஆனால் மீண்டும் பக்தர்கள் செல்லும் பாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
பக்தர்களைப் பாதுகாக்க திருப்பதி தேவஸ்தலம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டது.
விலங்குகள் வருவதைத் தவிர்க்க நடைபாதையில் அதிக வெளிச்சம் வரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டாலும் கடந்த 13ம் தேதியும் நேற்றும் பக்தர்கள் செல்லும் அல்லிப்பிரி பாதையில் சிறுத்தைகள், கரடி வந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust