Maharajas' express
Maharajas' expressTwitter

ஒரு ரயில் டிக்கெட்டின் விலை ரூ.19 லட்சமா? வைரலாகும் வீடியோ- நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

இந்த ரயில் பயணத்திலேயே, விலை உயர்ந்த சேவையை மகாராஜா எக்ஸ்பிரஸ் மூலம் இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது. இந்த ரயில் பயணத்திற்காக பயணி ஒருவரிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் டிக்கெட்டுக்கு மட்டும் வசூலிக்கப்படுகிறது.
Published on

இளைஞர் ஒருவர் ரூ.19 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கி ரயிலில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது

நம்மில் பலர் ரயில் போக்குவரத்தை அன்றாட வாழ்வின் தேவைக்கு பயன்படுத்துவோம்.

அதற்கு காரணம் பேருந்து, டாக்ஸி விமானம் என மற்ற அனைத்து வகையான போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் டிக்கெட் விலை குறைவு என்பது தான்.

ஆனால் இந்த ரயில் பயணத்திலேயே, விலை உயர்ந்த சேவையை மகாராஜா எக்ஸ்பிரஸ் மூலம் இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது.

இந்த ரயில் பயணத்திற்காக பயணி ஒருவரிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் டிக்கெட்டுக்கு மட்டும் வசூலிக்கப்படுகிறது.

இதில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஏதேனும் நான்கு வழித்தடங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

சுற்றுலா பயணிகளுக்கு ஆடம்பர ரயில் பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்தியாவின் சுற்றுலா துறையை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும் வகையில் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.

குஷாக்ரா என்ற இளைஞர் 19 லட்சம் கொடுத்து மகாராஜா எக்ஸ்பிரஸ்ஸில் பயணித்ததை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்திய ரயில்வேயில் இது போன்ற ஒரு ஆடம்பர பயணத்தை பார்த்ததுண்டா என தலைப்பிட்டு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

Maharajas' express
உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் : 100 பெட்டிகள்; 1.9 கி.மீ நீளம் - எங்கே?

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதில் பயணிப்பதற்கு பதில் ஒரு படுக்கை கொண்ட வீட்டை சொந்தமாக வாங்கி இருப்பேன் என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்த பணத்தில் உலகம் முழுவதுமே பயணித்திருக்கலாமே என்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Maharajas' express
Indian Railway : இந்தியாவில் நிச்சயம் பயணிக்க வேண்டிய 10 அழகிய ரயில் பாதைகள் | Photos

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com