மஹூவா மொய்த்ரா

மஹூவா மொய்த்ரா

Twitter

மஹூவா மொய்த்ரா : “பாதுகாப்பற்றதாக பயத்துடன் பாஜக இருக்கிறது” - கர்ஜித்த திரிணாமூல் எம்.பி

நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜித்தார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா.
Published on

"கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். நான் இன்று மாலை அவையில் பேசுகிறேன்" என்று முன்னதாக பாஜகவினருக்கு ட்விட்டர் வாயிலாக சவால் விடுத்திருந்தார் மஹூவா.

அவர் பகிர்ந்திருந்த ட்வீட்டில், "இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பாஜகவினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என கூறி இருந்தார்.

மஹூவா மொய்த்ரா

மஹூவா மொய்த்ரா

Facebook

இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிராக பொறிந்து தள்ளினார்.

தனது உரையில் நேதாஜி, வ.உ.சி, மற்றும் பாரதியாரை குறிப்பிட்டு பேசினார்.

“வரலாறுகளை திரித்து வருகிறது. ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. பாசிசத்தை கடுமையாக எதிர்த்த பகத் சிங்கையும், தான் உள்துறை அமைச்சரான பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் இன்று பாஜக அரசு கையிலெடுத்து, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது," என்றும் குறிப்பிட்டார்.

அவர் உரையின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

மஹூவா மொய்த்ரா

மஹூவா மொய்த்ரா

Twitter

இந்தியாவை அழிக்கும்

80% மற்றும் 20% என்ற பாஜகவின் பிரச்சாரம் இந்தியாவை 100% அழிக்கும் என்று அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா புதன்கிழமை கூறினார்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மொய்த்ரா, மோடி அரசை கடுமையாக சாடினார், "அவர்கள் வரலாற்றை மாற்ற விரும்புகிறார்கள், அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுகிறார்கள், அவர்கள் நிகழ்காலத்தை அவநம்பிக்கை கொள்கிறார்கள்.. நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகிறீர்கள்.

தன் இயல்பில் ஆரோக்கியமாக இருக்கும் இந்தியா, முரண்பட்ட வேறுபாடுகளுடன் நன்றாக இருக்கிறது... நீங்கள் தேர்தலில் பெறும் வாக்குகளால் மட்டும் திருப்தி அடையவில்லை. எங்கள் தலைக்குள் நுழைய விரும்புகிறீர்கள், எங்கள் வீட்டிற்குள் ஆக்கிரமிக்க விரும்புகிறீர்கள், என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்று சொல்ல விரும்புகிறீர்கள். யாரை நேசிப்பது என்பதை தீர்மானிக்கிறீர்கள். ஆனால் உங்கள் பயம் மட்டும் எதிர்காலத்தைத் தடுத்து விட முடியாது."

மக்கள் எப்படிப்பட்ட குடியரசு வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என்று மொய்த்ரா கேட்டுக் கொண்டார். “ எங்களுக்கு என்ன வகையான குடியரசு வேண்டும், இன்று நாம் விரும்பும் இந்தியா எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரி இந்தியாவிற்காக நாம் நிற்க வேண்டும், போராட வேண்டும், சிறையில் அடைபட வேண்டும்? நாம் ஒரு அரசியலமைப்பில் வாழ்கிறோம். அதை நாம் வாழ்வில் சுவாசிக்கும் வரை அரசியலைமைப்பும் உயிர் வாழும். இல்லையேல் அது வெறும் காகிதம்தான்".

Veer Savarkar

Veer Savarkar

Facebook

பாதுகாப்பற்றதாக பயத்துடன்

“இந்த அரசாங்கம் பாதுகாப்பற்றதாக பயத்துடன் இருக்கிறது. அதனால்தான் குடியரசு தின ஊர்வலத்தில் சுப்பிரமணியம் பாரதியார், வ.வு.சி, நாராயண குரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் திருவுருவச்சிலைகளை அனுமதிக்கவில்லை.” என்று அவர் கூறினார். மேலும் அரசாங்கம் சாவர்க்கரை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் நம் நாட்டின் உண்மையான ஹீரோக்களுக்கு பயப்படுகிறது என்றார்.

"குடியரசுத் தலைவரின் உரை நேதாஜியைப் பற்றிப் பலமுறை குறிப்பிடுகிறது. இந்திய அரசு அனைத்து மதத்தினரிடமும் முற்றிலும் நடுநிலை மற்றும் பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது அதே நேதாஜிதான் என்பதை இந்தக் குடியரசிற்கு நினைவூட்டுகிறேன்.” என்றார்.

"முஸ்லீம் இனப்படுகொலைக்கான இரத்தத்தை உறைய வைக்கும் அழைப்புகளை வெளியிடும் ஹரித்வார் தரம் சன்சாத் ஒன்றை நேதாஜி அங்கீகரித்திருப்பாரா" என்று அவர் கோபத்துடன் கேட்டார்.

1938 இல் கொமிலாவில் (இப்போது வங்காளதேசத்தில் உள்ளது) சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டி, மொய்த்ரா, "வகுப்புவாதம் முழு நிர்வாணத்தில் அதன் அசிங்கமான தலையை உயர்த்தியுள்ளது" என்று கூறினார்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் (INA) சின்னம் திப்பு சுல்தானின் புலி என்று அவர் கூறினார். ஆனால் அதே திப்பு சுல்தானை பாடப்புத்தகங்களில் இருந்து இந்த அரசு அழித்திருக்கிறது என்றார்.

மஹூவா மொய்த்ரா

மஹூவா மொய்த்ரா

Twitter

ஆபத்தான நாடு

ஃப்ரீடம் ஹவுஸ் (எனும் அரசுகளின் ஜனநாயகத்தை மதிப்பிடும் அமைப்பு) இந்தியாவை தரமிறக்கி உள்ளது என்று அவர் கூறினார். உலகில் ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக இது மாறியுள்ளது.

“எங்களுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது அரசாங்கம் அவநம்பிக்கை கொள்கிறது… மேற்கு உத்திரப்பிரதேசத்தில் தேர்தலில் தோல்வியடையும் பயத்தில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றீர்கள். ஆனால் இந்த முறை சவுத்ரிகள் உங்களை மறக்க மாட்டார்கள். உங்கள் அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது கார் ஓட்டி அவர்களைக் கொன்றதை மறக்க மாட்டார்கள். பெகாசஸ் மென்பொருள் ஆயுதத்தை வாங்குவதற்கும் மக்களை உளவு பார்ப்பதற்கும் அரசாங்கம் வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்தது என்று அவர் ஆவேசத்துடன் பேசினார்.

மஹூவா மொய்த்ரா

மஹூவா மொய்த்ரா

Twitter

பொய் பொய்

பெகாசஸ் பிரச்சினையில் அவர் ஒரு பத்தரிகையாளரின் ட்விட்டை மேற்கோள் காட்டினார். “நியூயார்க் டைம்ஸ் பொய் சொல்கிறது, சிட்டிசன் லேப் பொய் சொல்கிறது, அம்னெஸ்டி பொய் சொல்கிறது, பிரெஞ்சு அரசாங்கம் பொய் சொல்கிறது, ஜெர்மன் அரசாங்கம் பொய் சொல்கிறது, ஆப்பிள் நிறுவனம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியோவை என்எஸ்ஓ மீது வழக்கு தொடுத்தன. மோடி அரசு மட்டும் பெகாசஸ் பற்றிய உண்மையுடன் தனித்து நிற்கிறது" என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் மோடி அரசை வெளுத்து வாங்கினார்.

“அம்மா உங்களுக்கு இது சித்தாந்தப் போர். ஆனால் எங்களுக்கு இது பிழைப்பதற்கான போராட்டம்" என்று மேற்கு வங்கத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஏழை வாக்காளர் ஒருவரை மேற்கோள் காட்டி அவர் தனது உரையை முடித்தார்.

இறுதியில் "எங்களிடம் இருப்பதெல்லாம் நீங்கள்தான்... எங்களைத் தோல்வியடையச் செய்யாதீர்கள்" என்று கூறி நீதித்துறை தனது பங்கை ஆற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

logo
Newssense
newssense.vikatan.com