மலானா: மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம் - ஒரு விசிட்

அகலமான மரத்தூண்கள், சிக்கலான கதவுகள் மற்றும் ஒரு சுவரில் எலும்புகள், மண்டை ஓடுகள் மற்றும் பிற பலியிடப்பட்ட விலங்குகளின் பாகங்கள் கொண்ட கோயில் புதிராகத் தெரிந்தது.
மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம்
மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம்Jeganathan
Published on

இமாச்சல் பிரதேசத்தின் பார்வதி பள்ளத்தாக்கில் இருக்கும் கிராமம் மலானா. இல்லாததும் பொல்லாதுமான கதைகள், மர்மங்கள், விடையில்லாத கேள்விகள் இக்கிராமத்தில் புதையலைப் போன்று உள்ளன. ஹாஷிஷ் எனும் ’புனித’ மருந்தும் இங்கே வெள்ளமென ஓடுகிறது. இது சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான கிராமம்.

Jegannathan

1700 மக்கள், ஓராயிரம் கதைகள்

இமயமலையின் சிகரங்களில் அமைந்துள்ள செங்குத்தான பாறைகள் மற்றும் பனி மூடிய மலைகளால் சூழப்பட்டிருக்கிறது மலானா கிராமம். சுமார் 1700 மக்கள் வசிக்கும் இக்கிராமத்திற்கு நீண்ட காலமாக பயணிகள் வந்து போகிறார்கள். குளிர்ந்த காற்று மற்றும் கரும் பச்சை தேவதாரு மரங்கள் சூழ உள்ள சூழலில் பல நாட்கள் பயணிக் தங்குகிறார்கள். மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறவும், உள்ளூர் மக்கள் புனித மூலிகையாக கருதுவதை பயன்படுத்தியும் சுற்றுலா பயணிகள் நிவாரணம் அடைகிறார்கள்.

அந்த புனித மூலிகை மருந்து கஞ்சாவிலிருந்து கை வைத்தியத்தால் தயாரிக்கப்படுகிறது. அதன் போதை விளைவுகளுக்கும் புகழ் பெற்றது. இதையொட்டி கிராமத்தில் பல மர்மக் கதைகள் நிலவுகின்றன. முக்கியமாக மலானா கிராமம் அதன் போதை மருந்தான ஹாஷிஷிற்காக மட்டும் வெளியூர் மக்களால் அறியப்படுகிறது.

அலெக்ஸாண்டர் படை

கி.மு 326 இல் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தில் ஆட்சியாளரான போரஸுக்கு எதிரான போரில் காயமடைந்த, அலெக்சாண்டரின் இராணுவ வீரர்கள் சிலர், இந்த கிராமத்தில் தஞ்சம் புகுந்ததாக புராணக்கதை கூறுகிறது. இந்த வீரர்கள் பெரும்பாலும் மலானி மக்களின் மூதாதையர்கள் என்று கூறப்படுகிறது. அந்தக் காலத்தைச் சேர்ந்த கலைப்பொருட்கள் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வீரர்களுடனான மரபணு உறவுகள் ஆய்வின் மூலம் நிறுவப்படவில்லை. பல உள்ளூர்வாசிகளுக்கு இந்த கட்டுக்கதை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

அதே நேரம் மலானா மக்களின் வேறுபட்ட உடல்மொழிகள் அவர்கள் பேசும் கனாஷி மொழி போன்றவை மேற்கண்ட கூற்றுக்கு கொஞ்சம் ஆதரவாக இருக்கின்றன. கனாஷி மொழி உலகில் வேறு எங்கும் பேசப்படுவதில்லை.

ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியர் அஞ்சு சக்சேனா தலைமையில் கனாஷி பற்றிய ஆய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "கனாஷி நிச்சயமாக அழிந்து வரும், எழுதப்படாத மொழியாக உள்ளது" என்று சக்சேனா கூறுகிறார்.

"இது சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும், இந்தோ-ஆரிய மொழிகள் பேசப்படுகின்றன. அவை கனாஷியுடன் முற்றிலும் தொடர்பில்லாதவை. இது அதன் வரலாற்றுக்கு முந்தைய காலம் மற்றும் அதன் மொழியியல் அமைப்பு பற்றிய சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்புகிறது.” என்கிறார் சக்சேனா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Jegannathan

வாகனத்தில் செல்ல முடியாது

மலானாவிற்கு வாகனம் மூலம் செல்லக் கூடிய சாலைகள் எதுவும் இல்லை. மேலும் பார்வதி பள்ளத்தாக்கின் கீழே உள்ள ஜாரி கிராமத்தில் இருந்து மலையேற்றம் செய்து பயணித்தால் கிராமத்தை அடைய நான்கு மணி நேரம் ஆகும்.

மலானி மக்கள் வெளிர் பழுப்பு நிற முடி, வெளிர் பழுப்பு நிற கண்கள், நீண்ட மூக்கு மற்றும் ஒரு தனித்துவமான கோதுமை அல்லது தங்க பழுப்பு நிற தோலின் மூலம் தோற்றமளிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியமாக வெளிர் பழுப்பு நிற ஆடைகள், தொப்பிகள் அணிந்திருக்கினர். தோற்றத்தில் அவர்கள் ஹிமாச்சல் மக்களை விட ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதிகளைச் சார்ந்தவர்களாக தோன்றுகிறார்கள்.

கிராமத்தில் பயணிகள் நுழைந்தால் ஹாஷிஷ் மருந்து வாங்க ஆர்வமாக உள்ளதா என்று இளைஞர்கள் சாதாரணமாக விசாரிப்பார்கள். இந்த சிறிய கிராமத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கஞ்சா நீண்ட காலமாக இருந்து வந்தாலும், அது சிறு குழந்தைகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவது போன்ற பல சமூக-கலாச்சார பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது.

இதனாலேயே, ஓராண்டுக்கு முன்பு, ஜம்லு தேவ்தா என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஜமதாக்னி ரிஷி, (இந்து புராணங்களில் ஒரு சிறந்த முனிவராக அறியப்படும் பெயர்) தனது ஆன்மீக செய்தித் தொடர்பாளர் (குர்) மூலம் கிராமம் முழுவதும் உள்ள அனைத்து விருந்தினர் மாளிகைகளும் மூடப்படும் என்று ஆணையிட்டார். கிராமத்தை பகலில் மட்டும் வெளியாட்களுக்கு திறந்து விடுவது என முடிவெடுத்தார்.

ஜம்லு தேவ்தா கிராம நிர்வாகத்தில் முக்கியமானவர். இது ஒரு அரசியல் அமைப்பாகும். இது நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்களையும் பார்வையாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம்
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்
NewsSense

மிக பழமையானது

மலானாவின் தனித்துவமான ஜனநாயக அமைப்பு உலகின் மிகப் பழமையானது என்று கூறப்படுகிறது. மேலும் பண்டைய கிரேக்க ஜனநாயக முறையைப் போலவே, இது கீழ் சபை மற்றும் மேல் சபையைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது ஒரு தனித்துவமான ஆன்மீக சார்பைக் கொண்டுள்ளது. இறுதி தீர்ப்புகள் கிராமத்தின் பஞ்சாயத்து நீதிமன்றத்தால் அளிக்கப்படுகின்றன. இதில் மூன்று முக்கிய நபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் உள்ளூர் தெய்வமான ஜம்லு தேவ்தாவின் பிரதிநிதி.

ஜம்லு தேவ்தா ஒருமுறை மலானாவில் வசித்தார் எனும் உள்ளூர் புராணக்கதை பற்றி தத்தா எனும் இளைஞர் கூறுகிறார். இது இந்து கடவுளான சிவனால் அவருக்கு வழங்கப்பட்டது. கிராமத்தில் இரண்டு கோயில்களில் ஒன்று அவருக்கும் மற்றொன்று அவரது மனைவி ரேணுகா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மரத்தாலான மற்றும் செங்கல் வீடுகள் நிறைந்த இந்தப் பழங்கால கிராமத்தின் குறுகிய பாதைகளின் வழியாக சென்றால், ​​கீழ் சபை கூடும் பெரிய முற்றமும், ஜம்லு தேவ்தாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலையும் காணலாம். பனி படர்ந்த மலைகளின் பின்னணியில் அது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அகலமான மரத்தூண்கள், சிக்கலான கதவுகள் மற்றும் ஒரு சுவரில் எலும்புகள், மண்டை ஓடுகள் மற்றும் பிற பலியிடப்பட்ட விலங்குகளின் பாகங்கள் கொண்ட கோயில் புதிராகத் தெரிந்தது. ஆனால், ‘இந்தப் புனிதமான ஜமதாக்னி ரிஷியைத் தொட்டால் 3,500 ரூபாய் கேட்கும் எச்சரிக்கைப் பலகை வெளியே இருந்தது. புனிதம் என்றாலும் அதையும் விலை கொடுத்து வாங்கலாம்.

மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம்
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

வெளியாட்கள் தொடர்பு

இமாச்சலப் பிரதேசம் முழுவதும் உள்ள மக்கள் கருத்துப்படி மலானிகள் வெளியாட்களுடன் தொடர்பு கொள்வதைக் கட்டுப்படுத்துகிறார்கள். குறிப்பாக நேரடியான உடல் தொடர்புகள் கூட கூடாது. சுற்றுலா பயணிகள் கூட உள்ளூர் மக்களை பார்த்துப் பேச ஒரு தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.

சில இளைய தலைமுறையினர் கட்டிப்பிடிப்பதையோ அல்லது கைகுலுக்குவதையோ செய்தாலும், இங்குள்ள பெரும்பாலான மக்கள் இன்னும் வெளியாட்களைத் தொடுவதில்லை. கிராமத்துக்குள் மலானிகளுக்குள்ளேயே அகமண முறை திருமணங்கள் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பது விதி. இந்த விதிமுறையை மீறினால் சமூகப் புறக்கணிப்பு நிச்சயம்.

பொதுவாக ஹிமாச்சல் பிரதேசத மக்கள் அரட்டையடிப்பவர்களாகவும், பார்வையாளர்களுடன் கதைகளையும் உணவையும் பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.மலானாவில் உள்ளூர் மக்கள் வெளிநபர்களோடு நீண்ட உரையாடலை நடத்துவதோ சேர்ந்து உண்ணுதலோ கிடையாது.

மலைகளில் இருந்து இந்த தனி உலகமாக இருக்கும் கிராமத்திலிருந்து இறங்கி வரும்போது, ஒரு மர்மமான இமயமலைக் குக்கிராமத்திலிருந்து வெளியேறுவது போன்று இருக்கும்.

இப்படி பல ஆண்டுகளாக மலானா கிராமம் புதிர்கள் சூழப்பட்ட ஒரு மர்மமான கிராமமாக இருக்கிறது. அதே நேரம் பயணிகளும் நிம்மதியைத் தேடி வருகிறார்கள். அவர்களது பணம் மலானா மக்களுக்கு தேவைப்பட்டாலும் அவர்கள் தமது தனித்துவத்தை விட்டுக் கொடுப்பதில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com