Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா?

இந்த மால்ச்சா மஹால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாத இடமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவாத் நவாப்பின் வம்சத்தினர் இங்கு குடியேறினர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் என்பதற்கான பின் கதையும் ஒன்று உள்ளது
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய  மாளிகை பற்றி தெரியுமா?
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா?twitter
Published on

நீங்கள் அமானுஷ்யங்கள் நிறைந்த இடத்திற்கு செல்ல விரும்புபவர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.

இந்தியாவில் பல்வேறு அமானுஷ்ய ஸ்தலங்கள் சுற்றுலா பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. தனுஷ்கோடி, குல்தாரா, உனகோடி, ஜதிங்கா என நம் நாட்டில் மர்மங்களை கொண்டிருக்கும் இடங்களுக்கு பஞ்சமில்லை.

அவற்றில் ஒன்று தான் இந்திய தலைநகரான டெல்லியில் அமைந்திருக்கும் மால்ச்சா மஹால். இது பல மர்மங்களை தனக்குள் அடக்கியிருக்கும் ஒரு வேட்டை விடுதி அதாவது haunted hunting lodge!

மால்ச்சா மஹால்

இது ஃபெரோஸ் ஷா துக்லக்கால் கட்டப்பட்ட வேட்டை மாளிகையாகும். 1325ல் இவர் டெல்லியை ஆண்டபோது இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. இது ரைசினா மலைகளில் அமைந்துள்ள மால்ச்சா என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மால்ச்சா மஹால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாத இடமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவாத் நவாப்பின் வம்சத்தினர் இங்கு குடியேறினர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் என்பதற்கான பின் கதையும் ஒன்று உள்ளது

குடிவந்த நவாப்பின் குடும்பம்

விலாயத் மஹால் என்ற பெண் ஒருவர் தான் நவாப் வாஜித் அலி ஷாவின் கொள்ளுப் பேத்தி என்றும், பல ஆண்டுகளாக டெல்லி ஸ்டேஷன் அருகே வசித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆங்கிலேய அரசால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட அவரது பரம்பரை சொத்தினை இந்திய அரசாங்கம் திருப்பி தரவேண்டும் என்றும், தங்களை அரசக் குடும்பமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் அவர் பல ஆண்டுகளாக போராடினார்.

டெல்லி ரயில் நிலையத்தில் இப்படி ஒரு பெண் இருப்பதை பற்றி அறிந்த அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இந்த விஷயத்தில் தலையிட்டு, அவர்களுக்கு முதலில் தங்க வசதிகள் ஏற்படு செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். அதன் பிறகே, 1985ல் விலாயத் மஹால், மற்றும் அவரது மகன் அலி ராஸா, மகள் சகீனா மஹால் ஆகியோர் இந்த மாளிகைக்கு குடிவந்தனர்.

இவர்கள் சுமார் 3 தசாப்தங்களுக்கு இங்கு வாழ்ந்து வந்தனர்

Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய  மாளிகை பற்றி தெரியுமா?
8 அறை 160 அறைகளாக மாறியது எப்படி? அமானுஷ்ய வீடு கட்டப்பட்டதன் பின்னணி என்ன?

விலாயத் மஹாலின் தற்கொலை

பேகம் விலாயத் மஹால் தான் நவாப் அவாத்தின் வம்சத்தினர் என்று கூறியது உண்மையா என்ற சந்தேகங்கள் இருந்துவந்தது. அவர்கள் எங்கள் வம்சத்தினர் அல்ல என்பதை நவாப்பின் உறவினர்களே ஒரு முறை கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதனால், இவர்களின் பின்னணி அறியப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் ஒரு நாள் பேகம் விலாயத் மஹால் வைரக் கற்களை அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதற்கு ஆதாராங்கள் இல்லை.

ஆனால், அன்று முதல் மாளிகையில் பேகத்தின் ஆவி சுற்றிவருவதாக அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.

இவரது மகள் சகீனா மஹால் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. மகன் அலி ராஸா 2017ல் உயிரிழந்தார். இவர் மர்மமான முறையில் அந்த மாளிகையில் இறந்து கிடந்ததை மக்கள் கண்டறிந்துள்ளனர். இவரது ஆன்மாவும் அந்த மாளிகையில் சுற்றுவருவதாக கூறப்படுகிறது

Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய  மாளிகை பற்றி தெரியுமா?
Kuldhara: மனித வாடையே இல்லாமல் இருக்கும் ஓர் அமானுஷ்ய கிராமம் - கைவிடப்பட்டது ஏன்?

சுற்றுலா தலம்

இந்த அமானுஷ்ய கதையே இன்றளவும் சுற்றுலா பயணிகளை இந்த இடத்திற்கு வர ஈர்த்து வருகிறது. இங்கு கேமராக்கள், வாய்ஸ் ரிகார்டர்கள் பொறுத்தப்பட்டு உள்ளே நடப்பவற்றை பலர் பதிவுகளும் செய்கின்றனர்.

என்னதான் மர்மங்கள் நிறைந்திருந்தாலும், டெல்லியின் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய தலமாக உள்ளது இந்த மால்ச்சா மஹால்.

Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய  மாளிகை பற்றி தெரியுமா?
குல்தாரா முதல் ஜதிங்கா வரை: மர்மங்கள் நிறைந்த இந்தியா - அமானுஷ்யங்களின் மறுபக்கம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com