Male vs Female: எப்படி சிந்திக்கிறது ஆண்களின் மூளை? வித்தியாசமான தேர்வை வைத்த உணவகம்!

இந்த குவிக் ஐ டெஸ்ட்டின் விளைவுகள் சற்றே ஆச்சரியப்படும்படியாக இருந்துள்ளது. அந்த ஆங்கில வாசகத்திற்கு கீழேயே, இதனை ஆண்களின் மூளை மற்றும் கண்பார்வை எப்படி புரிந்துகொள்ளும், பெண்களின் புரிதல் எவ்வாறு இருக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Male vs Female: எப்படி சிந்திக்கிறது ஆண்களின் மூளை? வித்தியாசமான தேர்வை வைத்த உணவகம்!
Male vs Female: எப்படி சிந்திக்கிறது ஆண்களின் மூளை? வித்தியாசமான தேர்வை வைத்த உணவகம்!canva
Published on

ஒரே விஷயத்தை ஒரு ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் எப்படி புரிந்துகொள்கிறது என்பதை அறிய, இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் புதிய வகை தேர்வு ஒன்று பலரது கவனத்தை பெற்றுள்ளது

நாம் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. முக்கியமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல சமயங்களில் ஒரே விஷயம் குறித்த வெவ்வேறு புரிதல் இருக்கும். இதனை நிரூபிக்கும் வகையில், சற்றே நகைச்சுவையாக லெமன் ட்ரீ என்ற ஹோட்டல் வைக்கப்பட்டிருந்த டெஸ்ட் ஒன்று இணையத்தை கவர்ந்துள்ளது

மென் vs வுமன் என்று தலைப்பிட்டிருந்த அந்த தேர்வில், ஒரு ஆங்கில வாசகம் எழுதப்பட்டிருந்தது. அந்த வாசகத்தில் எத்தனை முறை, ஆங்கில எழுத்தான F வருகிறது என்பதை நாம் கண்டறியவேண்டும். இந்த தேர்வினை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஏற்கலாம்.

அங்கிருந்த வாசகமானது, “FINISHED FILES ARE THE RESULT OF YEARS OF SCIENTIFIC STUDY COMBINED WITH THE EXPERIENCE OF YEARS" என்பது.

இந்த வாசகத்தில் எத்தனை முறை F என்ற எழுத்து வருகிறது என்பதை 15 வினாடிகளுக்குள் கண்டறிய வேண்டும். அந்த ஹோட்டலுக்கு வந்த பல வாடிக்கையாளர்கள் இந்த தேர்வினை மேற்கொண்டனர்.

இந்த குவிக் ஐ டெஸ்ட்டின் விளைவுகள் சற்றே ஆச்சரியப்படும்படியாக இருந்துள்ளது. அந்த ஆங்கில வாசகத்திற்கு கீழேயே, இதனை ஆண்களின் மூளை மற்றும் கண்பார்வை எப்படி புரிந்துகொள்ளும், பெண்களின் புரிதல் எவ்வாறு இருக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வாசகத்தில் மொத்தம் ஆறு முறை F என்ற எழுத்து வருகிறது. அறிவியலின்படி, சராசரியாக ஆண்களுக்கு மூன்று F தான் கண்களுக்கு தெரியும் என்றும், பெண்களுக்கு ஆறு Fகள் தெரியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆண்களின் மூளையால் வாசகத்தின் இடையில் வரும் OF என்ற வார்த்தையை கவனிக்க முடியாது என்கிறது அந்த தேர்வு. அதனால் தான் மூன்று எழுத்துகள் மட்டுமே கண்ணுக்கு தெரியும். ஆனால், பெண்களுக்கு 6 Fகளும் தெரியும் என்கிறது அந்த தேர்வு.

Male vs Female: எப்படி சிந்திக்கிறது ஆண்களின் மூளை? வித்தியாசமான தேர்வை வைத்த உணவகம்!
பத்திரிகை அடித்து விவாகரத்தை கொண்டாடும் ஆண்கள் - இணையத்தில் வைரலாகும் இன்விடேசன்

ஒருவேளை இருக்கும் ஆறு Fகளும் கண்ணுக்கு தெரிந்தால், பெண்களின் சிந்தனைத் திறனை ஒருவர் கொண்டுள்ளதாக அர்த்தம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வினை மேற்கொண்ட இணையவாசிகளுக்கோ அதிலுள்ள விளைவுகள் ஒத்துப்போனதாய் தெரியவில்லை. பல ‘ஆண்களும்’ அந்த வாசகத்தை முதல் முறை படித்தபோதே 6 Fகள் இருந்ததை கவனித்ததாக தெரிவித்திருந்தனர். வேடிக்கையாக, சில பெண்களுடைய கண்ணுக்கு மூன்று Fகள் தான் தெரிந்துள்ளது.

இதனை படித்துவிட்டு உங்களுக்கு எத்தனை Fகள் தெரிகிறது என்று சோதித்துப் பாருங்கள்!

Male vs Female: எப்படி சிந்திக்கிறது ஆண்களின் மூளை? வித்தியாசமான தேர்வை வைத்த உணவகம்!
”ரூ.6000 நிதியுதவி வேண்டும்” - தெலங்கானா ஆண்கள் வைத்த விநோத கோரிக்கை - எதற்காக?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com