‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பது பாரதியாரின் வரி. ஆனால் விலங்களிடமும் அன்புகாட்டும் பழக்கம் மனிதர்களில் மிக அரிதாகிவிட்டது. ஆனால் இந்த நபரி செயல், இந்த காலத்திலும் விலங்கானாலும் மனிதன் ஆனாலும், உயிர் என்பது எல்லரொக்கும் ஒன்று தான் என்று நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நாய்யின் உயிரை சிபிஆர் செய்து காப்பாற்றும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் ஒரு நாய்க்கு சிபிஆர் சிகிச்சைக் கொடுத்து அதன் உயிரைக் காப்பாற்றுவது இடம் பெற்றிருக்கிறது. இதனை ஐஏஎஸ் அதிகாரியான அவானிஷ் ஷர்மா என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
“சில நேரங்களில் அற்புதங்கள் என்பது கனிவான இதயம் கொண்ட நல்ல மனிதர்கள்” எனத் தலைப்பிட்டு அவர் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. எனினும் ஒரு நாயின் உயிரைக் காக்க வேண்டும் என நினைத்த அந்த நபரின் எண்ணம் மிக உயர்ந்தது.
இந்த வீடியோவை 2 லட்சம் பேர் இதுவரைப் பார்த்திருக்கின்றனர். 14,000 க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரீட்விட்களை இந்த வீடியோ பெற்றிருக்கிறது. “சிபிஆர் என்பது ஒரு உயிரைக் காப்பதற்கான எளிய ஆயுதம். நாம் அனைவரும் அதனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.” என அதில் ஒரு பயனர் கருத்துத் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, “உயிரைக் காப்பதனைத் தவிர மேலானது எதுவுமில்லை” எனக் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp