பெண் பயணி புகாரால் 6 மணி நேரம் தாமதமான இண்டிகோ விமானம் - விசாரணையில் வெளியான உண்மை என்ன?

அப்போது அவரது மொபைலில் இருந்த குறுஞ்செய்தி சந்தேகிக்கும்படியாக இருந்ததால், இது குறித்து கேபின் குழுவிடம் தெரிவித்தார்.
Flights
FlightsCanva
Published on

விமானத்தில் தன் அருகிலிருந்தவரது மொபைலில் சந்தேகிக்கும் படியான குறுஞ்செய்தியை ஒரு பெண் பயணி கவனித்ததால், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 6 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் புறப்பட்டது.


மங்களூருவிலிருந்து மும்பை வரை செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் ஒரு பெண் பயணி தனக்கு அருகிலிருந்த நபரின் தொலைப்பேசியை எதார்த்தமாக கவனித்துள்ளார். அப்போது அவரது மொபைலில் இருந்த குறுஞ்செய்தி சந்தேகிக்கும்படியாக இருந்ததால், இது குறித்து கேபின் குழுவிடம் தெரிவித்தார்.

அவர்கள் விமான கட்டுப்பாட்டாளருக்கு தகவல் அளித்ததால், பிளேன் மீண்டும் விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டது. பின்னர் அந்த விமானத்திலிருந்த அனைத்து பயணிகளின் உடமைகள் சரிபார்க்கப்பட்டது.

மேலும் சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தியை வைத்திருந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த இளைஞருக்கும் அவரது காதலிக்கும் இடையில் நடந்த உரையாடல் தான் என்றும், அதே விமான நிலையத்திலிருந்து பெங்களூருவிற்கு அந்த பெண் பயணிக்கவிருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்களுக்கு இடையில் நடந்தது விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த உரையாடல் தான் என்றும் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு தெரியவந்தது.

இந்த குழப்பத்தால் சுமார் 6 மணி நேரம் அந்த விமானம் தாமதமானது. மாலை 5 மணிக்கு மங்களூரு- மும்பை விமானம் புறப்பட்ட நிலையில், அந்த நபரது காதலி தான் செல்லவிருந்த விமானத்தை மிஸ் செய்தார்.

Flights
வீட்டுக்கு வீடு விமானம் உள்ள அதிசய நகரம் - இதற்கும் இரண்டாம் உலக போருக்கும் என்ன தொடர்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com