மணிப்பூர் விவகாரம் : விகடனில் வெளியான சிறப்புக் கட்டுரை

வன்முறைக் கும்பலிடம் ஏகே 47, எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், .303 போன்ற சக்திமிக்க துப்பாக்கிகள் இருந்தன. இந்தக் கும்பலுக்கு பயந்து 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. பிறகு காட்டுக்குள் சென்று அவர்களை போலீஸ் ‘மீட்டது’.
மணிப்பூர் விவகாரம் : விகடனில் வெளியான சிறப்புக் கட்டுரை
மணிப்பூர் விவகாரம் : விகடனில் வெளியான சிறப்புக் கட்டுரைTwitter

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு குக்கி பழங்குடி பெண்கள் நிர்வாணமாக சாலை நடத்தி கொண்டுவரப்பட்ட வீடியோ நம் ஈரக்குலைகளை நடுங்கச் செய்தது.

அந்த பெண்களின் கண்முன்னே அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் மெய்தேய் கும்பலால் கொல்லப்பட்டனர்.

21 வயது மதிக்கத்தக்க பெண் பாலியல் வக்கிரங்களுக்கு ஆளானார். இரண்டு பெண்களை நிர்வாணமாக சாலையில் நடக்க வைத்து ஒரு இனத்தை அவமானப்படுத்தும் அளவுக்கு வன்மம் மெய்தேய் மக்களுக்கு ஏற்படக் காரணம் என்ன?

இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது சாலையில் வழிமறித்த வன்முறை கும்பல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது.

அதாவது இந்த சம்பவம் முழுவதுமாக காவல்துறையினரைத் தாண்டி தான் நடைபெற்றிருக்கிறது.

இந்த ஒரு சம்பவம் தான் வெளியில் தெரிந்துள்ளது. இதுபோல நூறுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதற்காக தான் இணையத்தை முடக்கி வைத்திருக்கிறோம் என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தெரிவித்தார்.

வீடியோ வைரலான பிறகு தான் அதில் சம்பந்தப்பட்ட 7 பேரை காவல்துறைக் கைது செய்துள்ளது. (மே மாதமே எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது)

எனில், முதல்வர் பைரன் சிங் சொல்லும் வீடியோக்கள் வெளியாகாத, இணையத்தில் பேசப்படாத மற்ற சம்பவங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

சாதாரண இனக் கலவரங்களைப் போல் இல்லாமல் இந்த வன்முறைக் கும்பலிடம் ஏகே 47, எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், .303 போன்ற சக்திமிக்க துப்பாக்கிகள் இருந்திருக்கின்றன.

காவல்துறை ஆயுதக்கிடங்கில் இருந்து 4,000 ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

வெளியான வீடியோவில் தோன்றிய ஒரு பெண்ணின் கணவர் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர். அதுவும் கார்கில் போரில் ஈடுபட்டவர்.

இராணுவ வீரர்களுக்கு பிரச்னை என்றால் பொங்கி எழும் குரல்கள் எல்லாம் மயான அமைதி காப்பது ஏன்? இந்த சம்பவம் குறித்து முன்னரே அறிந்திருந்தும் மாதர் சங்கங்கள் வாய் திறக்காதது ஏன்?

பிரதமர் ஜப்பான், எகிப்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றுவந்த பின்னர் தான் மணிப்பூர் பற்றி தெரிந்துகொண்டாரா என்ன?

இது இனக்கலவரமா அல்லது குக்கி மக்களுக்கு எதிரான இன அழிப்பா? இந்த வன்முறைகள் அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா? அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா? என்பதை ஆராய்கிறது விகடனின் இந்த சிறப்புக் கட்டுரை

கட்டுரையை படிக்க க்ளிக் செய்யவும்: மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com