இந்த மாதம் தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான மறு சீரமைப்பு பணிகளையும் நிவாரணம் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது அரசு.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர்களை தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் நிர்மலா சீத்தாராமன் அதற்கு சட்டத்தில் இடமில்லை எனக் கூறிவிட்டார்.
தமிழகத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை என மாநில கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாடு அரசை பற்றி முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் பணியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஒரு ரூபாய் கூட கூடுதல் நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசு 21000 கோடி கேட்டபோதும், ஒரு பால் பாக்கெட் வாங்க 21 ரூபாய் கூட ஒன்றிய அரசு தரவில்லை. ஒன்றிய அமைச்சர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவதா?
நீங்கள் ஆயிரம் அரசியல் பேசுங்கள் வேண்டாம் என சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதற்கு நாங்கள் பதில் அளிக்கிறோம்” என கடுமையாக சாடியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust