ஐஐடி இந்தியாவின் மிக பெரிய மற்றும் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் முதன்மையானது. ஐஐடி-யின் மும்பை கல்லூரியில் படித்து உலக அளவில் குறுப்பிடதக்க அதிகாரத்தில் இருக்கும் 10 நபர்கள் குறித்து காணலாம்.
உலகின் சமூக வலைதளங்களின் ஜாம்போவானான ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால். 38 வயதே ஆன இவர் இளம் சிஇஓ-களில் ஒருவர். ஐஐடி பாம்பேவின் முன்னாள் மாணவர். இங்கு இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பிஎச்டி முடித்தார். ஸ்டான்போர்டில் படிக்கும்போதே மைக்ரோசாஃப்ட், யாகூ மற்றும் ஏடி&டி லேப்ஸ் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். 2011-ல் ட்விட்டரில் சாதாரண மென்பொறியாளராக இணைந்தார் பராக். தனது திறனாலும் புதிய யுக்திகளாலும் ட்விட்டரில் பல முன்னெடுப்புகளை எடுத்து வெற்றிகண்ட பராக் கடந்த ஆண்டு முதல் சிஇஓ பதவியிலிருந்து வருகிறார்.
இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் பிறந்து அறிவியல் துறையின் மிக உயர்வான பதவியை அடைந்திருக்கிறார் இஸ்ரோ விஞ்ஞானி சிவன். இவர் கடந்த 2018ம் ஆண்டு இஸ்ரோவின் தலைவராகப் பதவியேற்றார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளை கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து அரசு கல்லூரியில் பயின்று இன்று இஸ்ரோவின் தலைவர் எனும் உயர் பதவியைப் பெற்றிருக்கிறார் சிவன். சென்னை எம்.ஐ.டி. கல்விநிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980-ல் பட்டம் பெற்ற சிவன், கடந்த 2006-ம் ஆண்டில் மும்பை ஐ.ஐ.டி-யில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
நாதன் நிலகேணி இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர். மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவரான இவர் 1982ம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். இவர் ஆதார் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது இன்போசிஸ்-ன் நான் எக்ஸிக்யூடிவ் சேர்மனாக இருக்கிறார்.
ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனரான பவிஷ் அகர்வால் ஐஐடின் முன்னாள் மாணவர்களில் ஒருவர். ஐஐடி மும்பையில் 2008ம் ஆண்டு கணினி அறிவியல் மற்று பொறியியல் பட்டம் பெற்றார். மைக்ரோ சாஃப்ட் ஊழியராகப் பணி வாழ்வைத் தொடங்கிய அவர் 2011-ல் ஓலா குழுமத்தை நிறுவினார். தற்போது ஓலா எலெட்ரிக் வாகன தயாரிப்பு வரை பல புதிய முன்னெடுப்புகளை விதைத்து வருகிறார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ ஆக பணியாற்றுபவர் சலீல் பரேக். இவர் ஐஐடி மும்பையில் ஏரோநாட்டிகல் பொறியியல் படித்தவர். தகவல் தொழில் நுட்பத்துறையில் அனுபவம் வாய்ந்த இவர் கடந்த 2018 முதல் இன்போசிஸ் சிஇஓ-வாக பணியாற்றுகிறார்.
மனோகர் பாரிக்கர் 1955-ஆம் ஆண்டு கோவாவின் மபுசா நகரில் பிறந்தவர். இவரது இளமைப் பருவத்தில், அதாவது 1970-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தார். அதன்பிறகு ஐஐடி மும்பையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடித்த பின்பு மறுபடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக பணியாற்றினார். தனது 26 வயதில் பாஜக கட்சியில் இணைந்த இவர் 1994-ல் கோவா முதலமைச்சர் ஆனார். 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சி அமைந்த போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரானார். ஐஐடி-யில் படித்த முதல் முதலமைச்சர் என்ற பெருமை இவரைச் சேரும். கடந்த 2018ம் ஆண்டு கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2019ம் ஆண்டு மறைந்தார்.
அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். மின்னணு துறையில் பவர் மேனேஜ்மென்ட் மற்றும் மெமரி போன்றவற்றில் இவரது ஈடுபாடு உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றது. இவர் மும்பை ஐஐடியில் 1987ம் ஆண்டு பி.டெக் படித்தவர்.
பொருளாதார வல்லுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் ஐஐடி மும்பையில் மெக்கானிகல் இஞ்ஜினியரிங் படித்தவர். கர்நாடகாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மத்திய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் குடிநீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
தங்கல், சில்லர் பார்டி போன்ற படங்களை இயக்கியவர் நிதிஸ். இவரது படங்கள் மூலம் இந்திய சினிமாவில் புதிய மைல் கல்லை நட்டியவர். இவர் ஐஐடி மும்பையில் உலோகவியல் பொறியியல் படித்தவர்.
இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார அறிஞர்களுள் ஒருவர் இவர். இவர் மும்பை ஐஐடி-யில் பி.டெக் படித்தவர். இந்திய ரிசர்வ் வங்கியின் இணை ஆளுநராக பணியாற்றியவர். இவர் ஐஐடி மும்பையில் 1995ம் ஆண்டு பி.டெக் முடித்தார். 2001ம் ஆண்டு நியூயார்க் பல்கலைகழகத்தில் நிதி மேலாண்மை தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com