சாலையில் அடிபட்ட பறவையை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் மற்றும் டிரைவர் பலி - வீடியோ வைரல்

மும்பை பாந்த்ரா-வொர்லி பாலத்தில் சாலையில் அடிபட்ட பறவையை காப்பாற்றுவதற்காகச் காரை விட்டு இறங்கிய இருவர் மீது டாக்ஸி ஒன்று மோதியதில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Bandhra-Worli sea link
Bandhra-Worli sea linkTwitter
Published on

மும்பையில் கடந்த மே 30 ஆம் தேதி பாந்த்ரா- வொர்லி கடற்பாலத்தில், சாலையில் அடிபட்டுக் கிடந்த பறவை ஒன்றை காப்பாற்றுவதற்காக இறங்கிய ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது டிரைவர் மீது அதி வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மீது அந்த கார் மோதும் CCTV காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Accident screenshot
Accident screenshotTwitter

தொழிலதிபர் அமர் மோனிஷ் ஜரிவாலா, 43, மும்பையில் வசிப்பவர். கடந்த மே 30 ஆம் அவர் பாந்த்ரா-வொர்லி கடற் பாலத்தின் மேல் சென்ற போது, அவரது கார் ஒரு பறவையின் மீது மோதியுள்ளது. அடிபட்ட பறவையை காப்பாற்றுவதற்காக அமர் மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஷ்யாம் சுந்தர் காமத் இருவரும் இறங்கியுள்ளனர்.

அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த ஒரு டாக்ஸி, தொழிலதிபர் அமர் மற்றும் ஓட்டுனர் ஷ்யாம் மீது மோதியது. அமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுனர் ஷ்யாம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டாக்சி டிரைவர் ரவீந்திர குமார் ஜெய்ஸ்வர் மீது கவனக்குறைவாகவும், காரை அதிவேகமாக ஓட்டி வந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மே 30 ஆம் தேதி நடந்த இந்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பறவையை காப்பாற்றச் சென்ற இருவர் இறந்த சம்பவம் பலருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது.

Bandhra-Worli sea link
மும்பை - மேற்கு வங்கம் : ஸ்பைஸ்ஜெட் விமானம் விபத்து - 40 பேர் காயம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com