தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோ

வீடியோவைப் பார்த்த பலரால் கங்கவ்வா பேசும் தெலுங்கை புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவரது உணர்ச்சிகளை புரிந்துகொண்டு கமண்ட் செய்து வருகின்றனர்.
தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோ
தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோTwitter

மில்குரி கங்கவ்வா என்ற தெலுங்கானாவைச் சேர்ந்த் விவசாயி பெண்மணியின் முதல் விமானப்பயணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதர் மிகக் குறைவு தான். யாருமே தங்களது முதல் விமானப் பயணத்தை மறக்க முடியாது என்பது உண்மை.

கங்கவ்வா 62 வயதில் தனது முதல் விமானப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சாதாரண விவசாயியான இவருக்கு யூடியூப் மூலமாக இது சாத்தியமாகியிருக்கிறது.

மை வில்லேஜ் ஷோ என்ற யூடிப் சேனல் மூலம் பிரபலமடைந்தார் கங்கவ்வா. அவரது முதல் விமானப்பயணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

போர்டிங் பாஸ் பெறுவது, சோதனை, விமானத்துக்குள் நுழைவது, சீட் பெல்ட் அணிய சிரமப்பட்டது என அனைத்தையுமே அவரது உணர்ச்சிகளுடன் வீடியோவில் பதிவு செய்துள்ளார் கங்கவ்வா.

கங்கவ்வா விமானத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து மிரண்டதாக கூறியுள்ளார்.

தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோ
DJ Black : இன்ஸ்டா ரீல்ஸில் அடிக்கடி வைரல் - யார் இந்த டிஜே பிளாக்

இந்த வீடியோ கிட்டத்தட்ட 6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 5.4 லைக்குகள் கிடைத்திருக்கின்றன.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களால் கங்கவ்வா பேசும் தெலுங்கை புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவரது உணர்ச்சிகளை புரிந்துகொண்டு கமண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கானா : 62 வயதில் முதல் விமானப்பயணம் மேற்கொண்ட விவசாய பெண்மணி - வைரல் வீடியோ
ஆஸ்திரேலியா : நாடாளுமன்றத்தில் Propose செய்த MP, ஓகே சொன்ன காதலி - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com