Mitshi India CFO resigns on school notebook paper in handwritten letter
Mitshi India CFO resigns on school notebook paper in handwritten letter Twitter

ரூ.19 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு நோட்புக் தாளில் எழுதிய ராஜினாமா கடிதம் வைரல்!

இவர் தனது சொந்த காரணத்திற்காக அந்த நிறுவனத்தில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஒரு ராஜினாமா கடிதத்தை தனது கைபட எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
Published on

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம்தான் மிட்ஷி இந்தியா லிமிட். இது காகிதம், பிளாஸ்டிக், மற்றும் உலோகப் பொருட்களையும், உற்பத்தி செய்கிறது.

கிட்டத்தட்ட 19 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தில் ரிங்கு பட்டேல் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தனது சொந்த காரணத்திற்காக அந்த நிறுவனத்தில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஒரு ராஜினாமா கடிதத்தை தனது கைபட எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ராஜினாமா கடிதம் கடந்த மாதம் 15 ஆம் தேதி எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதற்காக அந்த ராஜினாமா கடிதம் வைரல் ஆகிறது என்றால், தனது மகனின் நோட்புக்கிலுள்ள பேப்பரை பயன்படுத்தி எளிமையான முறையில் ராஜினாமா கடிதத்தை எழுதி, அதனை போட்டோ எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். அந்த ராஜினாமா கடிதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரின் ராஜினாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Mitshi India CFO resigns on school notebook paper in handwritten letter
அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் காணவில்லையா? குடியரசு தலைவர் அலுவலகம் விளக்கம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com