மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தாலுகா, கல்மோரா என்ற கிராமத்தில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறை சார்பில் டாக்டர் விஷ்ணு தர் வாகன்கர் ஆராய்ச்சி நிலையம் இந்த அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு அதிகாரி டாக்டர் துருவேந்திர ஜோதா, "12-ம் நூற்றாண்டை சேர்ந்த பார்மர் காலத்து பூமிஜ் பாணி கோயிலின் எஞ்சிய பகுதிகள் வெளிப்பட்டுள்ளன. இந்தக் கோயில் உயர்த்தப்பட்ட தளத்தில் இருந்து 9 அடி உயரமும் 15 மீட்டர்நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்திக்க வேண்டும்.
கோயில் மண்டபத்தின் ஒரு பகுதியும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவன் கோயிலில் துண்டு துண்டான ஒரு சிவலிங்கம், விஷ்ணு மற்றும் கருவறையின் மற்ற துண்டு துண்டான சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோயில் கிழக்கு நோக்கிஉள்ளது".
கடந்த மாதம் டாடா சன்ஸ் குழுமத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது ஏர் இந்தியா நிறுவனம். பெருத்த கடன் பிரச்சனைகளுடன் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது டாடா. இதனால் ஏர் இந்தியாவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து, நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் டாடா சன்ஸ் குழும தலைமை அதிகாரிகள். அதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்பட்டிருகிறார். துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி.
நியமனம் குறித்து இல்கர் ஐசி கூறுகையில் “ நாட்டின் முன்னணி விமான நிறுவனமான டாடாவின் ஏர் இந்தியா நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பதில் பெருமை அடைகிறேன். டாடா குழுமத்தாருடன் பழகியிருக்கிறேன்.
வலிமையான பாரம்பரியம் கொண்ட டாடா நிறுவனத்தில் இணைந்துள்ளேன். எங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, உலகிலேயே சிறந்த விமான நிறுவனம் என்பதை நிரூபிப்போம். சிறந்த விமானப் பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் டி குமார் கடந்த ஞாயிறு இரவில் அலுவலகத்தில் தற்கொலை செய்து இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
சக ஊழுயர் ஒருவர் அலுவலகத்தில் கிடந்த புகைப்படப் பத்திரிக்கையாளர் குமாரை காவல் துறையினருடன் இணைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, திங்கள்கிழமை (நேற்று) குமாரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
56 வயதான குமாருக்கு மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர் 30 வருடங்களுக்கு மேலாகா அந்நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார்.
இங்குள்ள செய்தி வெளியீட்டின் ஆதாரங்கள், அவர் நிதிச் சிக்கலை எதிர்கொண்டு வந்ததாகவும், கடந்த ஐந்து ‘சம்பளம் தரப்படவில்லை' எனவும் கூறுகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல, அலஹாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின், அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி வகித்தபோது, நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, கோயில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா, மதம் முக்கியமா என கேள்வி எழுப்பியது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகார தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது என்பன போன்ற பல முக்கிய வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
நேற்று அதிகாலையில் தென் தமிழகத்தின் பல பகுதியை சேர்ந்த மக்கள் வானில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று நீண்ட நேரமாக கீழ் நோக்கி வெளிச்சத்தை பாய்ச்சியபடி பறந்ததை கண்டு வியப்படைந்துள்ளனர். அந்த காட்சியை மொபைலில் வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கினர். இது ஏலியன்கள் கண்காணிப்பாக இருக்கக்கூடும் என நெட்டிசன்கள் கமன்ட்களை பறக்கவிட்டனர்.
தற்போது இந்த பொருள் இஸ்ரோவால் ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் எனத் தெரியவந்துள்ளது. இந்த ராக்கெட் 3 செயற்கைகோள்களுடன் நேற்று அதிகாலையில் விண்ணில் ஏவப்பட்டது.