ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் மார்ட்டின் மாலிக் 3 நிமிடத்தில் 1700 சிறிய பாக்சிங் குத்துகள் செய்து சாதனை படைத்துள்ளார். 3 நிமிடத்தில் 1100 குத்துகளும் செய்துள்ளார்.
மின்னல் வேகத்தில் குத்தும் திறன் கொண்ட இவர், "ரஷ்யாவைச் சேர்ந்த 27 வயது கிக் பாக்சரின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்" 2020 ஊரடங்கு காலத்தில் குத்துச்சண்டை காத்துக்கொண்டதாகவும், ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை விளையாட வேண்டும் என்பது அவரின் கனவு என்றும் கூறியுள்ளார்.
1996ஆம் வெளியான ‘அஜய்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுனீல் தர்ஷன். இப்படத்தைத் தொடர்ந்து ‘ஜான்வர்’, ‘ஏக் ரிஸ்டா’,‘டலாஷ்’, ‘அண்டாஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளது. இயக்கம் தவிர்த்து சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதுவே அவர் இயக்கத்தில் வெளியாக கடைசிப் படமாகும். இப்படத்தில் ஷிவ் தர்ஷன், நடாஷா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ படம் யூடியூப் தளத்தில் பலராலும் பதிவேற்றம் செய்யப்பட்டு பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. இப்படத்தின் காப்புரிமை தன்னிடம் மட்டுமே இருப்பதாகவும் இதனால் தனக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இயக்குநர் சுனீல் தர்ஷன் தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் இன்னும் சில கூகுள் நிர்வாகிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மாணவி படித்த பள்ளியில் ஹாஸ்டல் வார்டன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கியது. அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அந்த மாணவி பேசிய இரண்டாவது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தன்னை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு விடுதி வார்டன் கட்டாயப்படுத்தியதாக மாணவி தெரிவித்த வீடியோ, கடந்த 20-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. இது தொடர்பாக திருக்காட்டுள்ளி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதுடன், விடுதி வார்டனான சகாயமேரி என்பவரையும் கைதுசெய்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் அந்த மாணவி, பள்ளி வார்டன் தன்னைத் தேவையில்லாமல் வேலை வாங்கியதால், தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும், அதன் காரணமாகவே விஷம் குடித்துத் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, அந்த வீடியோவைப் பதிவு செய்த நபர் மாணவியிடம், `பள்ளியில் பொட்டு வைக்கக் கூறினார்களா?' எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி, `அப்படியெல்லாம் இல்லை' என்கிறார்.
கொலம்பியா நாட்டின் தலைநகர் பகோடாவுக்கு அருகில் உள்ள குவாடாவிடா பகுதியில் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கும் வீடு ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஆஸ்த்ரியா நாட்டைச் சேர்ந்த ப்ரிட்ஸ் ஷால் என்பவரால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள இந்தத் தலைகீழ் வீட்டில் சுற்றுலா பயணிகள் அறைகளின் மேற்பகுதியில் நடப்பதோடு, வீட்டின் பொருள்களும் தலைகீழாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
`அனைவரும் என்னைப் பைத்தியம் எனக் கருதினர்; நான் சொல்வதை யாரும் நம்பவில்லை. நான் தலைகீழ் வீடு ஒன்றைக் கட்டப் போகிறேன் என்று மக்களிடம் கூறினேன். அவர்களும் கிண்டலாக, `சரி, போய் அப்படியே செய்’ என்று என்னிடம் கூறினர்’ என்று கூறுகிறார் இந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பாளரும், உரிமையாளருமான ப்ரிட்ஸ் ஷால். இவர் கொலம்பியா நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
2015ஆம் ஆண்டு தனது பேரக் குழந்தைகளுடன் சொந்த நாடான ஆஸ்த்ரியா நாட்டுக்குப் பயணம் சென்ற போது, அங்கு இதுபோன்ற தலைகீழ் வீட்டைப் பார்த்து, அதிலிருந்து தனக்கும் இதே போல ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வம் உருவானதாகக் கூறுகிறார் ப்ரிட்ஸ் ஷால்.
சென்னை அருகே உள்ள செங்கல்பட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியை’ (விளையாட்டு நகரம்) அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து ஆராய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைப்பதற்கான ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது.
இந்த மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நீச்சல் வளாகம், சைக்கிள் பந்தய தடம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம், பல்நோக்கு உள்ளரங்கு மற்றும் கால்பந்து மற்றும் தடகள போட்டிகளுக்கான விளையாட்டரங்கு என மொத்தம் 20க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்களை கொண்ட ஒரு முழுமையான நகரமாக அமைக்கப்பட உள்ளது.
இவற்றுடன், தங்குமிடம், பணியாளர் குடியிருப்பு, உணவகங்கள், ஜிம் என்று பல்வேறு வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. தற்போது இதற்கு தேவையான சாத்தியக்கூறுகளை ஆராயவும், டெண்டர் மூலம் நிபுணர் குழுவை ஒப்பந்தம் செய்யவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலை (ஈசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு (ஓஎம்ஆர்) இடையே சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் திருவிடந்தைக்கு அருகில் அமையவுள்ள இந்த நகரத்திற்கான அனைத்து ஒப்புதலும் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் அமையவிருக்கும் முதல் விளையாட்டு நகரமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.