தீபாவளி பண்டிகையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்த கிராம மக்கள் - என்ன காரணம்?

தேவு பகுதியை சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகையினை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் தங்களின் கிராமத்தலைவர் மற்றும் அவர்கள் வணங்கும் கோயிலின் பூசாரியுடன் ஆலோசனை நடத்துவார்கள்.
MP villagers postpone their Diwali by a week as it falls on polling day
MP villagers postpone their Diwali by a week as it falls on polling day Twitter
Published on

தீபாவளி பண்டிகையினை ஒத்தி வைத்த சம்பவத்தை யாரவது கேள்விபட்டதுண்டா? இதனை ஒரு கிராமமே செய்ய உள்ளது வாருங்கள் அந்த பகுதியை பற்றி தெரிந்து கொள்வோம்.

மத்திய பிரதேசத்தில் வரும் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

மக்களிடையே பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள அஜான்பூர் பகுதியில் உள்ள மக்கள் தேர்தல் என்றால் தீபாவளிக்கு கூட காத்திருக்கலாம்

தங்களின் பாரம்பரிய தீபாவளி, மாநிலத்தில் வாக்களிக்கும் நாளுடன் ஒத்துப்போவதால், பண்டிகையை ஏழு நாட்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அந்த கிராமத்தின் பஞ்சாயத்து செயலாளர் குர்பன் தோமர் கூறுகையில்,

பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாங்கள் எல்லோரையும் போல தீபாவளி கொண்டாடுவதில்லை. தீபாவளி கொண்டாட்டத்தின் தேதி 'திதி'க்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வெள்ளிக்கிழமை அன்று வரும். நவம்பர் 17 அன்று தீபாவளி கொண்டாட பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அன்று தேர்தல் வருவதால் நாங்கள் தீபாவளையை தள்ளி வைத்துள்ளோம். ஆகவே நாங்கள் தீபாவளியை நவம்பர் 24 - ம் தேதி கொண்டாட உள்ளோம் என கூறினார்.

இந்த நிகழ்வு குறித்து லிராஜ்பூர் பழங்குடி கலாச்சார ஆராய்ச்சியாளர் அனில் கூறுகையில்,

தேவு பகுதியை சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகையினை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் தங்களின் கிராமத்தலைவர் மற்றும் அவர்கள் வணங்கும் கோயிலின் பூசாரியுடன் ஆலோசனை நடத்துவார்கள். அவர்களின் ஆலோசனை படி திதி பார்த்து தீபாவளியினை கொண்டாடுவார்கள் என கூறினார்.

தீபாவளி குறிப்பிடப்படும் நாளில் கிராம மக்கள் ஒன்று கூடி பிரார்த்தனை நடத்தி ஒரு மிருக பலியினை தங்கள் தெய்வத்திற்கு கொடுத்த பிறகு தீபாவளியினை கொண்டாடுவார்கள் என கூறப்படுகிறது

இந்த ஆண்டு தீபாவளி, வாக்குப்பதிவு தேதியுடன் ஒத்துப்போவதால், நாங்கள் எங்கள் பண்டிகைகளை மாற்ற திட்டமிட்டு முடிவு செய்தோம். இது எங்கள் மக்கள் வாக்களிக்கும் முறையை பாதிக்காமல் இருக்கும் என பஞ்சாயத்து தலைவர் தோமர் கூறியுள்ளார்.

பொதுவாக விழா நாட்கள் வரும் போது அரசு நிகழ்வுகளை தள்ளி வைப்பார்கள். ஆனால் தங்கள் பகுதியில் நடக்கும் தேர்தலுக்காக தீபாவளியினை ஒத்தி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

MP villagers postpone their Diwali by a week as it falls on polling day
தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? இந்து பண்டிகை பற்றிய 6 புராணக் கதைள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com