இந்தியாவின் மிக விலையுயர்ந்த Mall -ஐ தொடங்கும் முகேஷ் அம்பானி - ஒரு கடைக்கே இத்தனை லட்சமா?

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு மால் ஆன ஜியோ வேர்ல்ட் பிளாசாவை மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைக்கவுள்ளனர். இந்த மாலில் நூற்றுக்கணக்கான சர்வதேச சொகுசு கடைகள் அமைக்கப்படவுள்ளன.
Mukesh Ambani to launch India’s most expensive mall on this date; know luxury brands, rent
Mukesh Ambani to launch India’s most expensive mall on this date; know luxury brands, rentTwitter

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக வலம் வந்து கொண்டிருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு மால் ஆன ஜியோ வேர்ல்ட் பிளாசாவை மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைக்கவுள்ளனர்.

அப்பகுதியில் ஜியோ வேர்ல்ட் டிரைவ் என்று ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தான் ஆப்பிள் ஸ்டோர் அமைய உள்ளது. இந்தப் புதிய ஸ்டோருக்கு `Apple BKC' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரின் வாடகை மாதம் ரூ.42 லட்சம் ஆகும். இந்த ஸ்டோருக்காக மொத்தம் 11 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

 Google and Amazon
Google and AmazonTwitter

அதுமட்டுமில்லாமல் Amazon, Google, Facebook, LG, Microsoft, Sony, Twitter, Bose, Dell, Devialet, Foxconn, Garmin, Hitachi, HP, HTC, IBM, Intel, Lenovo, Nest, Panasonic, Toshiba, Samsung உள்ளிட்ட 22 நிறுவனங்கள் இந்த ஸ்டோரின் அருகில் ஸ்டோர் வைக்கக்கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இப்போது, முகேஷ் அம்பானி தனது மெகா-மால் ஜியோ வேர்ல்ட் பிளாசா மூலம் இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் சில்லறை வர்த்தகத்தில் களமிறங்க உள்ளார்.

இந்த மாலில் நூற்றுக்கணக்கான சர்வதேச சொகுசு கடைகள் அமைக்கப்படவுள்ளன. அவர்களில் சிலர் தங்கள் வணிகத்தை இந்தியாவிற்கு முதல் முறையாக கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mukesh Ambani to launch India’s most expensive mall on this date; know luxury brands, rent
அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்!

இந்தியாவில் பண்டிகைக் காலத்தின் மத்தியில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஜியோ வேர்ல்ட் பிளாசா சொகுசு மால் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மிக விலையுயர்ந்த மால் ஜியோ வேர்ல்ட் பிளாசாவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆடம்பர பிராண்டான டியோர் ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளது. இதற்காக மாதத்திற்கு ரூ. 21 லட்சத்திற்கும் மேல் வாடகை செலுத்தவுள்ளதாகவும், ரூ. 1.39 கோடி அட்வாண்ஸ் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட்டின் பிராண்டான லூயிஸ் உய்ட்டன், முகேஷ் அம்பானியின் மெகா மாலில் தனது கடையைத் திறக்க உள்ளது.

Mukesh Ambani to launch India’s most expensive mall on this date; know luxury brands, rent
அம்பானி முதல் ரத்தன் டாடா வரை - இந்திய பணக்காரர்களின் ராசி என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com