உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்ற அம்பானி, கோவில்லுகு ரூ.5 கோடி நன் கொடை நிதி அளித்துள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அம்பானி, அதானியின் வளர்ச்சிக்கு பிறகு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்திலும் முக்கிய பொறுப்புகளில் பிள்ளைகளை அமர வைத்து முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்த தருணத்தில் கேதர்நாத் கோவிலுக்கு செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருக்கிறார் அம்பானி.
கடந்த மாதம் கேதர்நாத் செல்வதற்காக குடும்பத்துடன் தேராதுன், ஜாலி கிராண்ட் விமான நிலையம் வந்த அம்பானிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்போது வானிலை சரியாக இல்லாததால் அவர் கோவிலுக்கு செல்ல முடியவில்லை.
இதனால் நேற்று முன்தினம் அங்கு சென்றார். அப்போது கோவில் நிர்வாகத்தின் துணைத் தலைவர் கிஷோர் பவார் அம்பானியை வரவேற்றார். சிறப்பு தரிசணம் செய்த அம்பானி கோவிலுக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இதேப் போல கடந்த மாதம் திருப்பதி வெங்கடேஸ்வரா தேவஸ்தலத்துக்கு வந்த அம்பானி, ஒன்றரைக் கோடி நன்கொடை வழங்கினார். அத்துடன் செப்டம்பர் 12ம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஶ்ரீநாத் ஜீ கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
கடைசியாக கடந்த 2019ல் கேதர்நாத் சென்ற ரிலைன்ஸ் சேர்மன் அம்பானி, 2 கோடி நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust