இந்தியா முதல் இங்கிலாந்து வரை: உலகம் முழுவதும் உள்ள விலையுயர்ந்த 5 வீடுகள் பற்றி தெரியுமா?

இந்திய பணக்காரர் அம்பானி வைத்திருக்கும் ஆன்டிலியா முதல் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வரை பிரம்மாண்ட விலை உயர்ந்த வீடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியா முதல் இங்கிலாந்து வரை: உலகம் முழுவதும் உள்ள விலையுயர்ந்த வீடுகள் பற்றி தெரியுமா?
இந்தியா முதல் இங்கிலாந்து வரை: உலகம் முழுவதும் உள்ள விலையுயர்ந்த வீடுகள் பற்றி தெரியுமா?Twitter
Published on

ஒரு சொந்த வீடு. இது இந்திய மக்களில் பலரும் துரத்திக் கொண்டிருக்கும் பெருங்கனவு.

ஒரு பெரிய ஹால், அதில் ஒரு சூப்பர் சோஃபா, நல்ல பெரிய42 இன்ச் எல்.இ.டி டிவி, அதற்கு தகுந்தாற் போல ஒரு கிராண்ட் டீபாய்... ஒரு பெரிய கிங் சைஸ் பெட் கொண்ட படுக்கை அறை, அடிக்கும் சென்னை வெயிலுக்கு இதமாக 25 டிகிரிக்கு ஏசி, மற்றொரு படுக்கையறை, ஒரு நல்ல மடியூலர் கிச்சன், ஒரு பிரமாதமான பூஜை அறை... என இந்தியர்களுக்கு வீட்டை விவரிக்கும் கனவுக்கு பக்கங்கள் போதாது.

இந்திய பணக்காரர் அம்பானி வைத்திருக்கும் ஆன்டிலியா முதல் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வரை பிரம்மாண்ட விலை உயர்ந்த வீடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆன்டிலியா

முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீடு 173 மீட்டர் உயரம் மற்றும் 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. 27 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் மும்பையில் அமைந்துள்ளது.

இந்த உயரமான கட்டிடத்தில் பல அடுக்குகளுக்கு கார் பார்க்கிங் மட்டுமே உள்ளது.

இதுதவிர 9 அதிவேக லிஃப்ட் மற்றும் இக்கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு அறைகளும் உள்ளன.

இந்தியா முதல் இங்கிலாந்து வரை: உலகம் முழுவதும் உள்ள விலையுயர்ந்த வீடுகள் பற்றி தெரியுமா?
Elon Musk : உலக பணக்காரர் வாழும் சிறிய 3BHK வீடு - ஏன் இதை தேர்வு செய்தார்?

பக்கிங்ஹாம் அரண்மனை

பக்கிங்ஹாம் அரண்மனை உலகின் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். வீட்டில் 775 அறைகள், 188 பணியாளர் அறைகள், 52 அரச மற்றும் விருந்தினர் படுக்கையறைகள், 92 அலுவலகங்கள், 78 குளியலறைகள் மற்றும் 19 ஸ்டேட்ரூம்கள் உள்ளன.

வில்லா Les Cedres

பிரெஞ்சு ரிவியராவில் உள்ள வில்லா லெஸ் செட்ரெஸ் பெல்ஜியம் மன்னருக்காக 1830 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

18,000 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் 14 படுக்கையறைகள், ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், 3,000 புத்தகங்களை வைத்திருக்கும் மரத்தாலான நூலகம், 30 குதிரைகள் நிற்கும் அளவுக்கு பெரிய தொழுவம், பிரமாண்டமான உட்காரும் அறைகள், அலங்கரிக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் உருவப்படங்கள் பிரேம்கள் போன்றவை உள்ளன.

இந்தியா முதல் இங்கிலாந்து வரை: உலகம் முழுவதும் உள்ள விலையுயர்ந்த வீடுகள் பற்றி தெரியுமா?
ஒரே வீடு, இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்: எப்படி சாத்தியம்? ஆச்சரியமூட்டும் தகவல்

வில்லா லியோபோல்டா

உலகின் மிகப்பெரிய வீடு என்று அறியப்படுகிறது இந்த வில்லா லியோபோல்டா. எஸ்டேட் 50 ஏக்கர் பரப்பளவில் பிரான்சில் அமைந்துள்ளது.

இந்த வீட்டில் 19 படுக்கையறைகள், 12 நீச்சல் குளங்கள், பரந்த தோட்டங்கள் போன்றவை உள்ளன.

Four Fairfield Pond

ஃபோர் ஃபேர்ஃபீல்ட் பவுண்ட் நியூயார்க்கின் சாகாபோனாக்கில் அமைந்துள்ளது. இந்த வீடு 63 ஏக்கர் நிலப்பரப்பில் 29 படுக்கையறைகள், 39 குளியலறைகள், ஒரு கூடைப்பந்து மைதானம், ஒரு பந்துவீச்சு மைதானம்,டென்னிஸ் மைதானங்கள், மூன்று நீச்சல் குளங்கள் மற்றும் 91 அடி பெரிய சாப்பாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்தியா முதல் இங்கிலாந்து வரை: உலகம் முழுவதும் உள்ள விலையுயர்ந்த வீடுகள் பற்றி தெரியுமா?
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com