சத்தீஸ்கர் மாநிலம், பலோட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதை அறிந்த இளைஞர் கடும் மன உளைச்சலிலிருந்து இருந்துள்ளார்.
சம்பவத்தன்று இளைஞர் தனது வீட்டுச் சுவரில், என் மரணம் தான், உனக்கான திருமண பரிசு என எழுதிவைத்துள்ளார். அதனைத் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதால் காதல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com