இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !
இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !Twitter

இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !

இந்த அழகிய திரைக்கு பின்னால், மனிதர்களின் அறிவுக்கு, அறிவியலுக்கு எட்டாத சில மர்மங்களும், ரகசியங்களும் புதைந்திருக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் அழகு, உயரமான, பச்சைபசேல் என காட்சியளிக்கும் மலைகள், எண்ணிலடங்கா சுற்றுலா தலங்களை கொண்டிருக்கிறது இமாச்சல பிரதேசம்.

ஆனால் இந்த அழகிய திரைக்கு பின்னால், மனிதர்களின் அறிவுக்கு, அறிவியலுக்கு எட்டாத சில மர்மங்களும், ரகசியங்களும் புதைந்திருக்கிறது.

மம்மி சங்கா
மம்மி சங்காட்விட்டர்

Mummy of Sangha Tenzin:

1975ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் ஒரு கல்லறையில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லறையில் இருந்த மம்மி சங்கா டென்சினுடையது. 500 ஆண்டுகள் பழமையான இந்த டென்சின் மம்மியின் முகத்தில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதே முகபாவனை இருப்பது தான் மர்மமே.

Maa Jwala Temple Kangra:

ஜுவாலா மாதா கோவிலில் எப்போதும் அணையாத ஜோதி ஒன்று எரிந்துக்கொண்டிருக்கும். இந்த சுடர் எந்தவிதமான எரிபொருளுமின்றி எல்லா நேரமும், எரிந்துக்கொண்டிருக்குமாம்

ஒரு முறை முகலாய பேரரசர் அக்பர் இந்த சுடரை தண்ணீரில் மூழ்கடித்து அணைக்க முயன்றார். ஆனால் அவரால் அதை அணைக்கமுடியவில்லை எனக் கதைகள் கூறுகின்றன. எப்படி இந்த சுடர் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவரை காரணம் தெரியவில்லையாம்.

காமருங் :

மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது காமருங் கோவில். மகாகபாரத கதையில் வந்த காமருங் என்ற யட்சன் கிருஷ்ணருக்கு குரு தட்சணையாக தன் தலையை சம்ர்ப்பித்தான்.

இந்த தலை கம்ரு என்ற கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.

காமருங் மழை மற்றும் செல்வத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்த கோவிலில் அமைந்துள்ள ஏரியில் பக்தர்கள் நாணயங்கள், நகைகள் ஆகியவற்றை போடுவது சம்பிரதாயம்.

இந்த நாணயங்களையும், நகைகளையும் கண்ணுக்கு தெரியாத ஒரு மாபெரும் சக்தி காத்து வருவதாக நம்பப்படுகிறது.

இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !
Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!

பிஜ்லி மகாதேவ்:

இந்தியில் பிஜ்லி என்றால் மின்னல் என்று பொருள். இங்கு அமைந்துள்ள சிவலிங்கத்தை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னல் ஒன்று தாக்கும்.

அந்த தாக்குதலில் சிவலிங்கம் உடைந்து சிதறும். பின்னர், கோவில் தலைமை அர்ச்சகரின் கனவில் சிவன் தோன்றி, உடைந்து சிதறிய துகல்கள் எங்கு கிடக்கின்றன என்ற தகவலை தருவார்.

சிவலிங்கத்தின் உடைந்த துண்டுகளைக் கண்டுபிடித்து சேகரித்து, வெண்ணை வைத்து ஒட்டி மீண்டும் சிவலிங்கத்தை உருவாக்குவர்கள்.

இந்த அதிசயம் ஒவ்வொரு 12 ஆண்டும் நடக்கிறதாம்.

Magnetic Hill of Leh:

லே கார்கில் நெடுஞாலையில் ஒரு சைன் போர்ட் இருக்கும். அதில், “The phenomenon that defies gravity. Park your vehicle in the box marked with white paint on road.” என்று எழுதிப்பட்டிருக்கும்.

இது காந்த மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த காந்த மலையில், வாகனங்களை எந்த திசையில் நிறுத்தினாலும் தன் வசம் ஈர்த்துக்கொள்ளும் ஒரு தன்மை இருக்கிறது. அதனால் குறிப்பிட்ட ஒரு வெள்ளை கோட்டுக்குள் நிறுத்தும்படி அந்த பலகையில் எழுதப்பட்டிருக்கும்.

லேவில் அமைந்திருந்தாலும், இமாச்சலப் பிரதேசத்தின் மர்மங்களில் ஒன்றாக தான் இது கருதப்படுகிறது.

இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !
குஜராத் : இரண்டாம் உலகப் போரால் லாபம் அடைந்த சூரத் - உலகின் வைர தலைநகராக வளர்ந்தது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com