மவ்ஸ்மாய் முதல் வௌவால் குகை வரை : Meghalaya -வில் இருக்கும் குகைகள் பற்றித் தெரியுமா?

அழகான அருவிகள், அடர்ந்த காடுகள், தெளிவான நீரோடை, தூய்மையான பழங்குடி கிராமங்களைக் கடந்து மேகாலயாவில் பார்க்க குகைகளும் இருக்கின்றன.
மஸ்வாமி முதல் வௌவால் குகை வரை : Meghalaya -வில் இருக்கும் குகைகள் பற்றித் தெரியுமா?
மஸ்வாமி முதல் வௌவால் குகை வரை : Meghalaya -வில் இருக்கும் குகைகள் பற்றித் தெரியுமா?Twitter
Published on

இந்தியாவில் வேறெங்கும் இல்லாதவண்ணம் அற்புதமான காட்சிகளை வழங்கக் கூடியது வடகிழக்கு பகுதிகள். அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய 7 மலைப்பிரதேச மாநிலங்களும் 7 சகோதரிகள் என அழைக்கப்படுகின்றன.

பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில் இயற்கையின் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. சுற்றுலா வருபவர்களைப் பொறுத்தவரையில் மேகாலயா அதியற்புத தளமாக இருக்கிறது.

அழகான அருவிகள், அடர்ந்த காடுகள், தெளிவான நீரோடை, தூய்மையான பழங்குடி கிராமங்களைக் கடந்து மேகாலயாவில் பார்க்க குகைகளும் இருக்கின்றன.

மவ்ஸ்மாய் குகை (Mawsmai Cave)

சிரபுஞ்சியில் உள்ள இந்த குகை நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தலமாகவும் இருக்கிறது. அகண்ட வாயில் இருந்தாலும் உள்ளே குறுகிய பாதைகள் வழியாக செல்கிறது மவ்ஸ்மாய் குகை.

இதனுள் 150 மீட்டர் வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல முடியும். இதன் தரையும் சரி, கூரையும் சரி சமமாக இல்லாமல் கூம்புகளைக் கொண்டிருக்கும். இந்த குகையின் அமைப்பை ஆய்வு செய்ய பலர் வருவதுண்டு.

சிஜு குகை (Siju Cave)

தெற்கு காரோ மலை மாவட்டத்தில் சிஜு வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கிறது இந்த குகை. இந்த குகையில் பெருமளவில் வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன. இதனை வௌவால் குகை என்றும் கூறலாம்.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய குகைகளில் இதுவும் ஒன்று. இது ஒரு சுண்ணாம்புக்கல் குகை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்சதி-உம்லவான் குகை (kotsati-umlawan cave)

கிழக்கு காசி மலைகளில் உம்லவான் கிராமத்துக்கு அருகில் இருக்கிறது இந்த குகை. இதன் அமைப்பு புகழ்பெற்றது. மேலும், இந்தியாவில் உள்ள நீளமான குகைகளில் இதுவும் ஒன்று. ஷிலாங்கில் இருந்து ஒரு கேப் மூலம் சென்றடையும் தொலைவிலேயே இந்த குகை அமைந்துள்ளது.

க்ரிம் மம்லூ ( Krem Mawmluh )

இது சிரபுஞ்சில் இருக்கும் மற்றொரு குகையாகும். மவ்சின்ராம் பகுதியில் உள்ள பல குகைகள் இங்கு இணைகின்றன. இது ஒரு குகை வலைப்பின்னல் என்றே கூறலாம்.

Krem Liat Prah, Krem Dam, Krem Puri, Krem Chympe என பல குகைகள் இங்கு உள்ளன.

மஸ்வாமி முதல் வௌவால் குகை வரை : Meghalaya -வில் இருக்கும் குகைகள் பற்றித் தெரியுமா?
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com