Mysterious light in Lucknow
Mysterious light in LucknowTwitter

பறக்கும் ரயில் போல வானில் தோன்றிய மர்ம ஒளி - குழம்பிய உ.பி. மக்கள் - உண்மை என்ன?

வானில் தோன்றும் ஒரு அறிய நிகழ்வு என்று கூறினர். மற்றவர்கள் இது யுஎஃப்ஒ என்று ஆச்சரியப்பட்டனர். சிலர் இது ஆத்மாக்களின் அணி வகுப்பு என்று தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.
Published on

உத்தரப்பிரதேசத்தில் நேற்று மாலை வானத்தில் பறக்கும் ரயில் போவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஜிட்டல் உலகில் பல்வேறு வித்தியாசமான, விசித்திரமான வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாவது உண்டு.

அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் உள்ளவர்கள் வானத்தில் ரயில் பறப்பது போலவும், அதில் விளக்குகள் எரிந்து கொண்டு போவது போலவும் உள்ள மர்ம வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்தனர். இது பர்வலாக பார்க்கப்பட்டு வருகிறது

சிலர் இதனை வானில் தோன்றும் ஒரு அறிய நிகழ்வு என்று கூறினர். மற்றவர்கள் இது யுஎஃப்ஒ என்று ஆச்சரியப்பட்டனர். சிலர் இது ஆத்மாக்களின் அணி வகுப்பு என்று தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.

ஆனால் வானில் தோன்றிய இந்த மர்ம ரயில் குறித்து TOI விளக்கமளித்துள்ளது. வானில் தெரிந்த ஒளி எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் என விளக்கமளித்துள்ளது.

Mysterious light in Lucknow
எலான் மஸ்க் முதல் சுந்தர் பிச்சை வரை - இளைஞர்களின் ரோல் மாடல் 'டெக்' நாயகர்கள்

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் மூலம் உலகில் இணையத்தை எளிதாக வழங்க முடியும். இதன் பெயர் ஸ்டார் லிங்க் திட்டம். எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் திட்டத்திற்காக கடந்த 2 வருடமாக 2200 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளார்.

இவை வானில் சுற்றிவருவதை நம்மால் இரவு நேரத்தில் பார்க்க முடியும். அதன் ஒரு செயற்கைக் கோள் பறந்து சென்றபோது தான், உத்திரப்பிரதேச மக்கள் கண்டுள்ளனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த ஸ்டார் லிங்க் செயற்கை கோள்கள் இரவு நேரத்தில் வானில் தெரிவதால் இதனை ஏலியன்கள் என மக்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர்.

Mysterious light in Lucknow
எலான் மஸ்க் தந்தை : 70 வயதில் வளர்ப்பு மகளோடு வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட எரால் மஸ்க்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com