அறிவியல் தான் கதைகளை விட உயர்வானது. ஆனால் அறிவியலால் கூட புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்கள் கதைகளில் இருக்கும். கதைகள், இதிகாசங்கள், புராணங்களால் நிறைந்தது இந்தியா. இந்தியாவில் அறிவியலால் விளக்க முடியாத மர்ம இடங்களும் பல உண்டு.
அமானுஷ்யக் கதைகளில் சொல்லப்படும் இடங்கள் விசித்திரமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சில இடங்கள் உண்மையாகவே இருக்கின்றன. அந்த மர்ம இடங்களைத் தான் இந்த தொகுப்பில் காணப்போகிறோம்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூப்குந்த் ‘எலும்புகளின் ஏரி’ என்றழைக்கப்படுகிறது. 1942ம் ஆண்டு பனிக்கட்டிகள் உருகி நீர் பெருக்கம் அதிகரித்திரித்த போது முதன் முதலாக இந்த எலும்புகளை பிரிட்டிஷ் வன அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவை மனித எலும்புக்கூடுகள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அது போரில் வீழ்ந்த ஜப்பானிய வீரர்களின் எலும்புக்கூடுகள் என்று நம்பப்பட்டது. ஆனால் 2004ம் ஆண்டு வேறு தியரி கூறப்பட்டது. இந்த எலும்புக்கூடுகள் கி.பி.8 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று சொல்லப்பட்டது. பனியில் சிக்கி உயிரிழந்த மன்னர் மற்றும் அவரது பரிவாரங்கள் என்றும் ஒரு தியரி கூறுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்னவென்று யாருக்கும் தெரியாது.
உலகில் யாரும் எளிதில் செல்ல முடியாத இடமாக இருக்கிறது லாடாக் அருகே இந்தியா - சீனா எல்லையில் இருக்கும் கொங்கா லா. 1962ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையில் கடுமையான சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த பகுதியில் இரு நாட்டு இராணுவங்களும் ரோந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இராணுவங்கள் கூட செல்ல முடியாத இந்த பகுதி தூரத்திலிருந்து மட்டுமே கண்காணிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் UFO-க்கள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இந்தியா மற்றும் சீன அரசுகள் மட்டுமே அறிந்திருக்கக் கூடிய UFO திட்டங்கள் இங்குச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள UFO -க்களை பார்த்ததாக பல குறிப்புகள் உள்ளன.
அசாம் மாநிலத்திலுள்ள சிறிய பழங்குடி கிராமம் ஜடிங்கா. இங்கு மிக விசித்திரமான அதே நேரத்தில் மர்மமான நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் இங்குள்ள பறவைகள் கொத்து கொத்தாகத் தற்கொலை செய்து கொள்ளும்.
உள்ளூர் பறவைகள் மட்டுமல்லாமல் இடம் பெயர்ந்து வரும் பறவைகளும் அந்த நாட்களில் மரங்களில் மோதி இறக்கின்றன. இதற்கான காரணத்தை அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை. உள்ளூர் வாசிகள் இது தீய சக்திகளின் செயல் என்று நம்புகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இந்த கோவிலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் வசிக்கின்றன. இந்த எலிகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ செய்வது இங்கு மிகப் பெரிய தவறாகும். இந்த எலிகளை மக்கள் வழிபடுகின்றனர், அவற்றைப் புனிதமாகப் பார்க்கின்றனர். இங்கு வரும் மனிதர்களை விட எலிகளுக்கே அதிக மதிப்பு அளிக்கப்படுகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் கோதினி. இது இரட்டையர்கள் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்குள்ள பல வீடுகளில் இரட்டையர்கள் இருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இந்த கிராமத்தில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. சில மூவர் கூட உண்டு. அரசாங்கம் இந்த கிராமத்தில் ஒரு வீடு ஒரு குழந்தை என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய முடியாதல்லவா?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust